கங்குவா படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக களமிறங்கும் நடிகர்.. கிளைமாக்சில் சிறுத்தை சிவா வைத்த டுவிஸ்ட்..!!

By Priya Ram on ஜூலை 22, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் கங்குவா படத்தில் சூர்யா நடித்துள்ளார் வருகிற அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி கங்குவா படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோகிரீன் நிறுவனங்கள் இணைந்து கங்குவா படத்தை தயாரித்துள்ளது.

கங்குவா' எப்படி இருக்கு? படம் பார்த்து சூர்யா கொடுத்த ரியாக்‌ஷன்! – News18  தமிழ்

   

இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3டியில் தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் படம் ரிலீஸ் ஆக உள்ளது. கங்குவா படத்தின் முதல் பாகத்திற்கான சூட்டிங் ஏற்கனவே முடிவடைந்து விட்டது.

   

Surya - Action result taken by Karthi | சூர்யா - கார்த்தி எடுத்த அதிரடி  முடிவு

 

இந்த நிலையில் படம் குறித்த சீக்ரெட் ஒன்று வெளியாகி உள்ளது விக்ரம் படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அது போலவே கங்குவா படத்திலும் நடிகர் கார்த்தி நடிக்கப் போகிறாராம். முதல் பாகத்தின் இறுதியில் கார்த்தி வருவது போல காட்சிகள் எடுக்கப்பட உள்ளது. மேலும் இரண்டாவது பாகத்திலும் சூர்யாவும் கார்த்தியும் நடிக்க உள்ளனர்.

கங்குவா... சூர்யாவுடன் இணையும் கார்த்தி

இரண்டாவது பாகத்தில் சூர்யாவுக்கு வில்லனாக கார்த்தி நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை போல கங்குவா படத்தில் கார்த்தியின் கதாபாத்திரம் பயங்கரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

கங்குவா படம் பொங்கல் ரிலீஸ் இல்லையா?