தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். அந்த படத்திற்கு ராயன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வருகிற 26-ஆம் தேதி ராயன் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

ராயன் திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, செல்வ ராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, சரவணன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் எஸ் ஜே சூர்யா நடித்த பேட்டியில் கூறியதாவது, ராயன் படத்திற்காக படத்திற்காக தனுஷ் 30 கோடி ரூபாய் செலவில் செட் போட்டுள்ளார்.

ஆர்ட் டைரக்டர் ஓட தனுஷ் உட்கார்ந்து அந்த செட்டில் உள்ள தெருக்கள், வீடுகள், ப்ராபர்ட்டி எல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்று யோசித்து பண்ணி இருக்காரு. இவ்ளோ பெரிய செட்டு போட்டுட்டோமே. அதை கண்டிப்பா காட்டியே ஆகணும்னு தனுஷ் நினைக்கல. அந்த சீனுக்கு எது தேவையோ அதை மட்டும் காட்டியிருக்காரு. செட்டு போட்டோம்னு அத காமிக்காம தேவையான இடத்தில் மட்டும் அத காட்டி இருக்காரு. அந்தப் பக்குவத்தை நான் ரசிச்சேன்.

அந்த இடத்துல நானே இருந்தாலும் நம்ம இத்தனை கோடி ரூபாய் செலவில் செட்டு போட்டு இருக்கோம் அதை ஒரு ஷாட் வச்சு காட்டணும்னு எண்ணம் வந்திருக்கும். அப்படி பண்ணாம தனுஷ் நேர்த்தியா பண்ணி இருக்காரு. கதாபாத்திரத்தோட ஹேர், டிரஸ் என ஒவ்வொன்றையும் தனுஷ் பார்த்து பார்த்து பண்ணி இருக்காரு என எஸ்.ஜே சூர்யா கூறியுள்ளார்.

