தமிழ்நாட்டிற்கு 2 நாட்கள் ரெட் அலெர்ட்… அடுத்த 3 மணி நேரத்தில்… வானிலை மையம் எச்சரிக்கை…!!

By Soundarya on கார்த்திகை 27, 2025

Spread the love

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. ஆறுகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு 2 நாட்கள் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

 அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள் மாவட்டங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி  கன்னியாகுமரி தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கோவை, நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று தெரிவித்துள்ளது.