நாம் சொகுசாக செல்லும் லிப்ட்டில் கண்ணாடி இருப்பது ஏன்? – அட இதை பத்தி எல்லாம் நமக்கு தெரியவே தெரியாதே… ஆச்சரியம் தரும் உண்மைகள்!

By Elango on மார்கழி 21, 2025

Spread the love

பல்வேறு இடங்களுக்கு நாம் செல்லும்போது உயரமான கட்டிடங்களில், ஷாப்பில் மால்களில் மேலே செல்லவும் கீழே வரவும் லிப்ட்களை பயன்படுத்துகிறோம். சொகுசாக சில விநாடிகளில் பல மாடிகளை கடந்து குறிப்பிட்ட பகுதிக்கு சென்று விடுகிறோம். அந்த லிப்ட்களில் கண்ணாடி பொருத்தப்பட்டு இருக்கும். அதை பலரும் தங்களது அழகை பார்க்கவும் தோற்றத்தை சரிபார்த்துக் கொள்ளவுமே வைத்திருப்பதாக பலரும் நினைக்கின்றனர்.

ஆனால் அதையும் தாண்டி லிப்ட்டில் கண்ணாடி பொருத்தி வைப்பதற்காக அறிவியல் காரணங்கள் குறித்து இப்போது தெரிந்து கொள்ளலாம். சிலருக்கு லிப்ட் போன்ற மூடிய அல்லது வரையறுக்கப்பட்ட இடங்களில் இருக்கும் போது க்ளாஸ்ட்ரோஃபோபியா மற்றும் பதட்டம் பயம் போன்ற உளவியல் பிரச்சினைகள் ஏற்படும்.

   

இதை தடுக்கவே லிப்டுக்குள் கண்ணாடிகள் வைக்கப்படுகின்றன. குறுகிய இடத்தில் இருந்தால் ஏற்படும் பதட்டத்தை தவிர்த்து இது நிம்மதியை தரும். ஏனென்றால் லிப்ட்டில் கண்ணாடி இருப்பது அதிக இடம் இருப்பது போன்ற மாயையை உருவாக்கும். மேலும் லிப்ட்டில் கண்ணாடி இருப்பதால் பயணிப்பவர்கள் சுற்றுப்புறங்களை தெளிவாக பார்க்க முடிகிறது. இதனால் நம்மை தவறாக யாரும் அணுகாமல் இருக்கவும் அச்சுறுத்தல் பற்றி உடனடியாக அறியவும் இந்த கண்ணாடிகள் உதவுகின்றன.

   

லிப்ட்டில் ஏறி குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும் வரை பொறுமையின்மை பிரச்சனைக்கு இந்த கண்ணாடி தீர்வு தருகிறது. மேலும் நேர்முக தேர்வுகள் மற்றும் திருமண நிகழ்வுகளுக்கு செல்பவர்களுக்கு தங்களை தோற்றத்தை சரிபார்த்துக் கொள்ளவும் லிப்ட்டில் உள்ள கண்ணாடிகள் பயன்படுகிறது.