அடுத்த அதிரடி… 10 தொகுதிகளில் திமுக… களத்தில் இறங்கிய செந்தில் பாலாஜி… பரபரப்பு பேட்டி…!

By Nanthini on மார்கழி 21, 2025

Spread the love

தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் இந்த முறையும் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வர் ஸ்டாலின் பல வியூகங்களை வகுத்து வருகின்றார். தனது கூட்டணி கட்சிகளை பலமாக வைத்திருக்கும் திமுக மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வரும் நிலையில் அவர்களுடனும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில் திமுகவை விமர்சனம் செய்யாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது என்ற ஒரு சூழல் இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கோவை தொகுதியில் போட்டியிட போவதாக சமூக ஊடகங்களில் தான் அது போன்ற தகவல் வெளியாகி உள்ளது. சமூக வலைத்தளங்களில் யாரோ ஒருவர் பேசுவதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 10 தொகுதிகளில் ஜெயிக்க வேண்டும். அதுவே எங்களுடைய முதல் முயற்சி என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.