2026 தேர்தல் கூட்டணி… அண்ணாமலையை சந்தித்ததன் காரணம்… சற்றுமுன் டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி…!

Spread the love

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தற்போது தீவிர படுத்தியுள்ளன. கூட்டணி, பிரச்சாரம், பொதுக்கூட்டம், நலத்திட்ட பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மற்றும் கட்சி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல் என பல நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தற்போது மேற்கொண்டு வருகின்றன. தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அடுத்தடுத்து விளங்கினர்.

இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கூட்டணியில் இணைய மாட்டோம் என்று இருவரும் உறுதிப்பட கூறி வருகிறார்கள். இப்படியான நிலையில் டிடிவி தினகரன் நேற்று கோவையில் உள்ள அண்ணாமலை வீட்டுக்கு சென்றார். அங்கு இருவரும் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அண்ணாமலை நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் டிடிவி தினகரன் கோவையில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, அண்ணாமலையை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன், கூட்டணி குறித்து முடிவு செய்ய இன்னும் காலம் உள்ளது. அமமுகவை தவிர்த்துவிட்டு எந்த கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது. நாங்கள் இடம்பெறும் கூட்டணி தான் வெற்றி பெறும், ஆட்சி அமைக்கும் கூட்டணியாக இருக்கும். கூட்டணி தொடர்பாக பொறுத்து இருந்து முடிவு எடுப்போம். அண்ணாமலை என்னுடைய நெருங்கிய நண்பர். நேற்றைய சந்திப்பு நட்பு ரீதியிலானது மட்டுமே. அந்த சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை. விலை போகாத தொண்டர்கள் என்னுடன் பயணிக்கிறார்கள் என்று டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

Nanthini

Recent Posts

24 நாட்களுக்குப் பின் கிடைத்த மெகா க்ளூ…. செஞ்சி சிறுமி ஹேமலதா நாமக்கல் கோவிலில்?…. பதறி அடித்துச் சென்ற சிபிசிஐடி… சிக்கிய சிசிடிவி காட்சிகள்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7…

2 minutes ago

மாமனார் மீது இவ்வளவு பாசமா…? ரூ.1.5 கோடியில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய மருமகன்… வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்…!!

பொதுவாக மாமனார் - மருமகன் உறவு என்றாலே மனக்கசப்புகள் அதிகம் பேசப்படும் சூழலில், தனக்கு வாழ்வளித்த மாமனாருக்கு ரூ.1.5 கோடி…

4 minutes ago

“2017 செங்கோட்டையன் கொண்டுவந்த சட்டம்”…. அரசு விதியை மீறிய முதல்வர் விஜய் – அமைச்சர் ராஜ்மோகன்?…. தவெக விழாவில் வெடித்த சர்ச்சை….!

தமிழ்நாட்டில் கல்வி விருது வழங்கும் விழாக்களும், அதில் பின்பற்றப்படும் நடைமுறைகளும் எப்போதும் சமூக அளவில் பெரும் விவாதப் பொருளாகவே இருந்து…

6 minutes ago

“டிஜிட்டல் ஆதாரங்கள் லீக்”…. “இனி 10 சீட் கூட ஜெயிக்க முடியாது”…. திமுகவுக்கு சி.டி.ஆர் நிர்மல்குமார் வைத்த அதிரடி ஆப்பு….!

பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பில் சமரசம் செய்து சான்றிதழ் வழங்குவதற்காக, கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல லட்சக் கணக்கில் பண வசூல்…

10 minutes ago

ரூ. 11,400 டெல்லி பிளைட் VS ரூ.500 சென்னை ஆட்டோ…. பகீர் கிளப்பும் கிலோமீட்டர் கணக்கு…. விமான கட்டணத்தையே தூக்கி சாப்பிட்ட சென்னை ஆட்டோ ஃபேர்…!

சென்னை என்றாலே மெரினா கடற்கரை, ஃபில்டர் காபி, தியாகராய நகர் ஷாப்பிங் போன்ற பல பெருமைகள் நினைவுக்கு வந்தாலும், அதே…

14 minutes ago

நீலாங்கரையை விட்டு வெளியேறிய முதல்வர் விஜய்…. 15 நிமிடத்துக்காக எடுத்த அதிரடி முடிவு…. பின்னால் இருக்கும் அந்த ஒரு அதிரவைக்கும் காரணம்….!

தமிழக முதல்வர் விஜய் சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள தனது இல்லத்தில் இருந்து தினமும் தலைமைச் செயலகத்திற்குச் சென்று வந்தார். சுமார்…

19 minutes ago