2026 தேர்தல் கூட்டணி… அண்ணாமலையை சந்தித்ததன் காரணம்… சற்றுமுன் டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி…!

By Nanthini on மார்கழி 9, 2025

Spread the love

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தற்போது தீவிர படுத்தியுள்ளன. கூட்டணி, பிரச்சாரம், பொதுக்கூட்டம், நலத்திட்ட பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மற்றும் கட்சி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல் என பல நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தற்போது மேற்கொண்டு வருகின்றன. தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அடுத்தடுத்து விளங்கினர்.

இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கூட்டணியில் இணைய மாட்டோம் என்று இருவரும் உறுதிப்பட கூறி வருகிறார்கள். இப்படியான நிலையில் டிடிவி தினகரன் நேற்று கோவையில் உள்ள அண்ணாமலை வீட்டுக்கு சென்றார். அங்கு இருவரும் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அண்ணாமலை நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் டிடிவி தினகரன் கோவையில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, அண்ணாமலையை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

   

அதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன், கூட்டணி குறித்து முடிவு செய்ய இன்னும் காலம் உள்ளது. அமமுகவை தவிர்த்துவிட்டு எந்த கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது. நாங்கள் இடம்பெறும் கூட்டணி தான் வெற்றி பெறும், ஆட்சி அமைக்கும் கூட்டணியாக இருக்கும். கூட்டணி தொடர்பாக பொறுத்து இருந்து முடிவு எடுப்போம். அண்ணாமலை என்னுடைய நெருங்கிய நண்பர். நேற்றைய சந்திப்பு நட்பு ரீதியிலானது மட்டுமே. அந்த சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை. விலை போகாத தொண்டர்கள் என்னுடன் பயணிக்கிறார்கள் என்று டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.