காஞ்சிபுரத்தில் இன்று மக்கள் சந்திப்பில் விஜய் பேசி வருகிறார். அதில், நமக்கு எல்லாமும் கொடுத்த மக்களுக்கு எல்லா நல்லதையும் செய்யணும். அதை சட்டப்பூர்வமாக செய்யணும். அங்கீகாரத்தோடு செய்யணும். அதிகாரப்பூர்வமா செய்யணும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் செய்யணும். ஒரே மாதிரி செய்யணும்.
ஒரே எண்ணத்தோடு செய்யணும். அந்த ஒரே இலட்சியத்தோடு தான் அரசியலுக்கு வந்திருக்கோம். உங்களை என்னை நம்மை எல்லோரையும் பொய் சொல்லி நம்ப வச்சு ஓட்டு போட வைத்து ஏமாத்தினாங்கல்ல. அப்படி ஏமாற்றி ஆட்சிக்கு வந்து நல்லது செய்ற மாதிரி நடிக்கிறாங்கல்ல, நாடகம் ஆடுறாங்கள்ல, அவர்களை நம்ம எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும் என்று கூறியுள்ளார்.
