மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன் என்று விஜய் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றி வரும் விஜய், மக்களிடம் செல் என்று கூறி அண்ணாவை மறந்தது யார்? மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலுக்கு வந்துள்ளேன். தொழிற்சாலை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் பெறுகிறது . சட்டம் ஒழுங்கை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும். தமிழக வெற்றி கழகம் கட்சியினர் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்களை தற்குறிகள் என அழைத்து வாங்கிக்கட்டி கொண்டனர். அறிவுத் திருவிழா என்ற பெயரில் அவதூறு திருவிழா நடத்தி நம்மை தற்குறிகள் என்கின்றனர். நடிகர் கட்சி என்று அவதூறு இன்று ஆரம்பித்தது கிடையாது.
53 ஆண்டுகளாக கூத்தாடி, நடிகர் கூட்டம் என தொடர்ந்து கதறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஒட்டுமொத்த தமிழகமும் எம்ஜிஆர் பின் தான் நின்றது. நமக்கு கொள்கை இல்லை என சொல்கிறார்கள். பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை கோட்பாட்டை அறிவித்த நமக்கு கொள்கை இல்லையா? அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும், சமூக நீதி கிடைக்க வேண்டும், உண்மையான சமூக நீதியாக அது இருக்க வேண்டும், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொன்ன நம் கொள்கை இல்லையா என்று விஜய் தெரிவித்துள்ளார்
