Connect with us

CINEMA

நீ பொம்பள மாதிரி இருக்க கூடாது.. என் கணவர் தான் எனக்கு இப்டி முடி வெட்டி விட்டாரு.. Hairstyle ரகசியத்தை சொன்ன கருணாஸின் மனைவி..

பொதுவாக சில ஆண்கள் தங்களது மனைவி இவ்வாறு இருக்க வேண்டும் என பட்டியலிடும் போது பெரும்பாலும் கூறுவது அவர்களது முடி நீளமாக இருக்க வேண்டும் என்பது தான்.. ஒரு காலத்தில் முடி நீளமாக வைத்திருக்கும் பெண்கள் தான் குடும்பத்தை நன்றாக நடத்துவார்கள் என்ற சொல் வழக்கும் இருந்தது. அப்படி இருக்கையில் நடிகர் கருணாஸ் தனது மனைவியின் நீளமான முடியை வெட்டி விட்டு ஆண் போல் இருக்க வேண்டும் என கூறி இருக்கிறாராம்.

#image_title

   

நகைச்சுவை நடிகர், சட்டமன்ற உறுப்பினர், குணச்சித்திர நடிகர் என பன்முக திறமை கொண்ட கருணாஸ் பின்னனி பாடகி கிரேஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண புகைப்படங்களில் கூட கிரேஸ்க்கு ஆண்கள் போன்று தான் ஹேர் ஸ்டைல் இருக்கும். அப்போதே இது பற்றி பேசப்பட்டது. பிற்காலத்தில் அந்த ஹேர் ஸ்டைலே அவரது அடையாளமாக மாறிப் போனது. சமீபத்தில் நடிகர் கருணாஸ் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி படத்தில் கூட ஒரு பெண் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற பிற்போக்கு தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த கருணாஸ் மனைவியிடம் அதை எதிர்பார்க்கவில்லையோ என்ற சந்தேகம் அவரது ரசிகர்களிடம் எழுந்தது.

#image_title

இந்த நிலையில் தான் இந்த தம்பதி சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தனது மனைவியின் முடியை தான் தான் வெட்டியதாக கூறியிருக்கிறார். காதலிக்கும் காலத்தில் கிரேஸுக்கு நீளமான முடி இருந்ததாகவும், அதனை வெட்டி விட்டு ஆண்களைப் போல் தைரியமாக இருக்க வேண்டும் எனக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

#image_title

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top