என்னடா செல்லமா-வ இப்டி பண்ணி வச்சிருக்கீங்க..? மோசமான கதாபாத்திரத்தில் ‘டாக்டர்’ பட நடிகை.. வெளியான Trailer-ஆல் கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்..

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் தமிழில் நெல்சன் திருக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக’ டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார்.

   

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் ,இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே  உள்ளது. தற்பொழுது இவர் ‘டிக் டாக்’ என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில்  ராஜாஜி ஹீரோவாகவும், சுஷ்மா ராஜேந்திரா கதாநாயகி யாகவும், பிரியங்கா மோகன் இன்னொரு கதாநாயகியாகவும்  நடித்துள்ளனர்.

மேலும் முருகானந்தம், சாம்ஸ், நமோ நாராயணா, வினோதினி, சஞ்சனா சிங், மதுசூதனன் மற்றும் பலர் இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டோனி செயின் மற்றும் முருகன் செல்லப்பா இருவரும் ஒளிப்பதிவையும், ரோசாரியா இசையையும், ராஜேஷ் செல்வராஜ் படத்தொகுப்பையும்,  பிரபு சதீஷ் நிர்வாக தயாரிப்பையும், சுரேஷ் மாரிமுத்து இணை தயாரிப்பையும், பிரபு சதீஷ் இணை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். எம் கே எண்டெர்டைன் சார்பில் மதன் குமார் டிக் டாக் படத்தை தயாரித்து,  டைரக்ட் செய்துள்ளார்.

சமீபத்தில் இத்திரைப்படத்தின் ‘தூரிடாதே’ பாடல் வரிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் திரில்லர் பட பாணியில் , அமானுஷ்யங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இத்திரைப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ‘செல்லம்மா வா என்னடா பண்ணி வச்சிருக்கீங்க? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு நடிகை பிரியங்கா மோகன், இதில் கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். இதோ அந்த ட்ரெய்லர் வீடியோ….