கூட்டணியில் இருந்து விலகுகிறோம்…. சற்றுமுன் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிவிப்பு… தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்..!

By Nanthini on ஆடி 30, 2026

Spread the love

மேகதாது அணைக் விவகாரத்தில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளுமே கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளதாகப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அந்தமானில் காடுகளைப் பாதுகாக்கக் குரல் கொடுக்கும் ராகுல் காந்தி, மேகதாதுவில் காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்க ஒரு வார்த்தையாவது பேசுவாரா என்று கேள்வி எழுப்பினார். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று ராகுல் காந்தி ஒரே ஒரு வரி அறிக்கை வெளியிட்டால், பாமக உடனடியாக பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகத் தயார் என்றும் அவர் அதிரடியாகச் சவால் விடுத்துள்ளார். மேலும், தமிழகத்தின் உரிமைகளுக்காக முதலமைச்சருடன் இணைந்து பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில், தமிழகத்திற்குக் காவிரித் தண்ணீர் தரமறுக்கும் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகப்பெரிய தவறு என்றும் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார். மேகதாது அணை குறித்துக் கர்நாடக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தமிழக முதலமைச்சர் விஜய் செல்வது தவறான அணுகுமுறை என்றும், அவரை யார் வழிநடத்துகிறார்கள் என்பதே தெரியவில்லை என்றும் அவர் விமரிசித்துள்ளார். காங்கிரஸை சேர்ந்த மாணிக்கம் தாகூர் போன்ற தமிழக தலைவர்கள் ராகுல் காந்திக்கு அழுத்தம் தரத் தைரியம் இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பிய அவர், அண்டை மாநிலத்தின் சூழ்ச்சிகளுக்குத் தமிழக அரசு பலியாகிவிடக் கூடாது என்றும், மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை வார்த்தை நடத்துவதைத் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.