வீட்டுக் கடன் அல்லது வாகனக் கடனுக்கு அதிக EMI செலுத்தி வருபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இனி உங்கள் EMI குறைய வாய்ப்புள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைக்கவில்லை, வங்கிகளும் எந்த சிறப்புத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை. ஆனால் வட்டி குறைவதற்கான ரகசியம் உங்கள் CIBIL ஸ்கோரில் அடங்கியுள்ளது.
ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்காமல் வங்கிகள் சிறப்பு அறிவிப்பை வெளியிடாமல் உங்களின் கடன் இஎம்ஐ தொகையை குறைக்க முடியும். அதற்கான அறிவிப்பை தான் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி உங்களுக்கு கடன் கிடைக்க உதவும் சிபில் ஸ்கோர் உயர்ந்தால் நீங்கள் ஏற்கனவே பெற்றிருக்கும் கடன்களின் இஎம்ஐ தொகையை குறைக்கலாம். இதுவரை EMI தொகையை சரியாக செலுத்தி உங்களின் சிபில் ஸ்கோர் மேம்பட்டிருந்தால் உடனே வங்கியை நீங்கள் அணுகுங்கள். இதன் மூலமாக உங்களின் கடன்களின் EMI தொகை குறையுமென ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
