தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகளால் சுமார் 1.15 கோடி பெண்கள் மட்டுமே பயனடைந்து வந்தனர். மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத குடும்பங்களின் அதிருப்தியை குறைக்கும் நோக்கத்தில், அரசு தற்போது பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முக மூலமாக புதிதாக சுமார் 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த விண்ணப்பதாரர்களில் வருமான வரி செலுத்தும் குடும்பங்களை சேர்ந்தவர்களை தவிர்த்து மற்ற தகுதியுள்ள பெண்களுக்கு உரிமை தொகை வழங்குவதற்கு நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்நிலையில் மகளிர் உரிமை தொகைக்கு கூடுதலாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் அடுத்த மாதம் தகுதியானவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். ராணிப்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அவர், தற்போது 1.20 பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதோடு மகளிர் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
