“பொங்கல், தீபாவளி மாதிரி ‘ஜனநாயகன்’ திருவிழா”…. விஜய் பட ரிலீசுக்கு அரசு விடுமுறை?… புஸ்ஸி ஆனந்த அறிவிப்பார்.. வேற லெவல் அடி…!

Spread the love

‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீட்டை அரசு விழாவைப் போல கொண்டாட வேண்டும் என்று அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ள நிலையில், படம் வெளியாகும் நாளில் அரசு விடுமுறை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் த.வெ.க ஆட்சி வராது என்ற எண்ணத்தில், நிதி ஆதாரங்களை கணக்கில் கொள்ளாமல் சாத்தியமில்லாத 326 திட்டங்களை கானல் நீரைப் போல தேர்தல் அறிக்கையில் விஜய் அறிவித்தார் என்றும், அதை நம்பி வாக்களித்த மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்றும் அவர் சாடினார். த.வெ.க ஆட்சி அமைத்து 75 நாட்கள் கடந்தும், ஆட்சி அமைந்த அதிர்ச்சியிலிருந்து முதல்வர் விஜய் இன்னும் வெளியே வரவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்த்த வேளையில், தற்போதைய அறிவிப்பு விவசாயிகளுக்குப் பேரிடியாக அமைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் வெடித்துள்ளதாக உதயகுமார் தெரிவித்தார். மேலும், வீடுகளுக்கு மாதந்தோறும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று கூறிவிட்டு, தற்போது 500 யூனிட் வரை உபயோகிப்பவர்களுக்கு மட்டுமே அது பொருந்தும் என அறிவித்திருப்பது வெறும் கண்துடைப்பு என்றார். தமிழகம் முழுவதும் தற்போது நிலவும் கடுமையான மின்தடையால், பொதுமக்கள் இரவில் வீதிக்கு வந்து போராடாத நாளே இல்லை என்ற அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கும் திட்டத்தையும் அவர் கடுமையாக சாடினார். இத்திட்டத்தின் கீழ் 4.4 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் மோதிரம் வழங்கினால், செய்கூலி, சேதாரம் மற்றும் ஜிஎஸ்டி உட்பட அரசுக்கு 750 கோடி ரூபாய் வரை செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையைச் செலவிடுவதால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு என்ன பயன் என்ற கேள்வியை எழுப்பிய உதயகுமார், மாணவர் விடுதிகளில் இட்லி, தோசை, சப்பாத்தி வழங்கப்படுகிறதா என்று பார்ப்பதற்கு முதல்வர் நேரடியாகச் செல்லும் அளவிற்குத்தான் த.வெ.க அரசின் நிர்வாகத் தரம் உள்ளது என்றும் எள்ளி நகையாடினார்.

தமிழகத்தில் நிலவும் இத்தகைய நிர்வாகச் சீர்கேடுகளுக்கு மத்தியில், உலகெங்கும் வெளியாகவுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீட்டை பொங்கல், தீபாவளி பண்டிகைகளைப் போல திருவிழாவாகக் கொண்டாட வேண்டும் என அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் மாவட்டச் செயலாளர்களுக்கும் அமைச்சர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். மக்கள் நலனை மறந்த இந்த த.வெ.க அரசு, தங்களின் அடுத்த அதிரடி அறிவிப்பாக படம் வெளியாகும் நாளை அரசு விடுமுறையாக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று ஆர்.பி. உதயகுமார் தனது பேட்டியில் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

“யாரோ அடிச்சுட்டாங்க சார்…” நாடகம் ஆடிய தாய்… கள்ளக்காதலால் பறிபோன 7 வயதுச் சிறுவனின் உயிர்… அடித்தே கொன்ற கொடூரன்… குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!

மகாராஷ்டிர மாநிலம் அம்பர்நாத் பகுதியில், தாயின் கணவருடனான கள்ளக்காதலன்/வாழ்க்கைத் துணையால் கொடூரமாகத் தாக்கப்பட்ட 7 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி…

6 minutes ago

“ஐயோ பாவம்…” ஒரே ஒரு நிமிட அலட்சியம்… அநியாமா பறிபோன உயிர்… இரண்டு அரசுப் பேருந்துகளுக்கு நடுவே நடந்த நெஞ்சை பிளக்கும் துயரம்… வைரலாகும் வீடியோ…!

உத்தரப் பிரதேசத்தின் ஹர்டோய் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான சாலை விபத்தில், 32 வயதான பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…

13 minutes ago

“கடவுள் மாதிரி வந்திங்க…” மரணத்தின் விளிம்பில் மீட்டெடுத்த மாயக்கரம்… பல உயிர்களைக் காப்பாற்றிய மனிதன்… மக்களின் திரும்பிப் பார்க்க வைத்த நிஜமான ஹீரோ…!

இது போன்று சமூக ஊடகப் பக்கங்களில் அல்லது இணையத்தில் நாம் காணும் சுயவிவரக் குறிப்புகளும் விளம்பரங்களும், சமூகத்திற்குச் சேவையாற்றும் சிறந்த…

22 minutes ago

செங்கடலில் வெடித்த பேரதிர்ச்சி…! சவூதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பின் ஏவுகணை தாக்குதல்…! சவூதி அரேபியாவுக்கு விழுந்த மெகா அடி…!!

செங்கடலில் சவூதி அரேபிய துறைமுகங்களுக்குச் செல்லும் வணிகக் கப்பல்கள் மீது விதிக்கப்பட்ட தடைகளை மீறியதாகக் கூறி, 'என்சீலியா' மற்றும் 'லைலா'…

31 minutes ago

“இது வெறும் டிரைலர் தான்.. இனிமேதான் மெயின் பிக்சர் இருக்கு”… மத்திய அரசுக்கு கரப்பான் பூச்சி ஜனதா பரபரப்பு எச்சரிக்கை…!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர்…

35 minutes ago

“என்ன விட்டுரு மா…” அலறி துடித்த மாமியார்…!! கத்தியால் குத்தி தரதரவென இழுத்து வந்த மருமகள்…. பதற வைக்கும் வீடியோ…!!

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் சிகல்குடா பகுதியில் உள்ள எருகள வஸ்தி பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக விஜயலட்சுமி என்ற பெண்…

41 minutes ago