விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். 7 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்தது. இப்போது எட்டாவது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமலஹாசன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
ரவீந்தர் சந்திரசேகர், சாட்சனா நமிதாஸ், தீபக், தர்ஷா குப்தா, சத்யா, கானா ஜெஃப்ரி, சுனிதா, ஆர் ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, அன்சிகா, தர்ஷிகா, அருண் பிரசாத், விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அர்ணவ் ஆகியோர் போட்டியாளராக பங்கேற்றுள்ளனர். இந்த சீசன் தொடங்கிய நாள் முதலே விறுவிறுப்பாக செல்கிறது. இன்று முதல் எலிமினேஷன் நடைபெற்றது.

#image_title
முன்னதாக ரஞ்சித், ஜாக்குலின், ரவீந்தர் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் ரவீந்தர் எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில் ரவீந்தர் மற்ற போட்டியாளர்களை விட பிக் பாஸில் அதிக சம்பளம் வாங்கியுள்ளார். அவருக்கு ஒரு நாளைக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஏழு நாட்களுக்கு ரவீந்தருக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுத்துள்ளனர்.