பாக்யஸ்ரீ என்று அழைக்கப்படும் பாக்கியலட்சுமி 1980களில் தென்னிந்தியாவின் முக்கிய நடிகையாக திகழ்ந்தவர். தமிழ் மலையாளம் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 60 படங்களுக்கும் மேல் நடித்து பிரபலமானவர். பாக்கியலட்சுமி சென்னையில் தமிழ் பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் முறையாக பரதநாட்டியத்தை கற்று தேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1982 ஆம் ஆண்டு தேவியின் திருவிளையாடல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பாக்கியலட்சுமி. அடுத்ததாக மலையாள சினிமாவுக்கு சென்று அங்கு கவனம் செலுத்ததினார். பின்னர் 1984 ஆம் ஆண்டு நியாயம் கேட்கிறேன், நலம் அறிய ஆவல், சாந்தி முகூர்த்தம் ஆகிய மூன்று திரைப்படங்களில் நடித்தார்.
தொடர்ந்து சங்கிலி ஜெயபால், வளையல் சத்தம், கொடி பறக்குது, ஒரே ரத்தம், சக்தி பராசக்தி, சின்ன வாத்தியார், மாப்பிள்ளை மனசு பூப்போல போன்ற படங்களில் நடித்தார். இறுதியாக இவர் நடித்த திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியான தர்மபத்தினி என்ற படமாகும்.
2000களின் நடுப்பகுதிக்கு பிறகு வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த பாக்கியலட்சுமி பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார். சன் டிவி ஜெயா டிவி விஜய் டிவி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடரில் பார்வதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை பாக்கியலட்சுமி.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட பாக்கியலட்சுமி நடிக்க ஆரம்பித்தபோது தான் செய்த தவறை கூறியிருக்கிறார். அது என்னவென்றால் நடிக்க ஆரம்பிக்கும் போது இளமையாகவும் ஸ்லிம்மாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஊசி போட்டுக்கிட்டேன். அந்த ஊசி ஏன் போட்டோம்னு இப்போ நான் வருத்தப்படுறேன். ஏன்னா அந்த ஊசியால எனக்கு இப்ப ரொம்ப வெயிட் போட்டுச்சு. நான் என்னதான் டயட் ஃபாலோ பண்ணாலும் எக்ஸசைஸ் பண்ணாலும் என்னால வெயிட் குறைக்கவே முடியல. இப்போ நான் அந்த ஊசியை போட்டு இருக்க கூடாது வருத்தப்படுகிறேன் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் பாக்கியலட்சுமி.
