உலகம் முழுவதும் இந்து மதத்தினர் பரவி இருக்கிறார்கள். இந்து மத கோவில்களும் உலகம் முழுவதும் இருக்கிறது. மிகவும் பழமை வாய்ந்த மதங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தியா ஒரு புண்ணிய பூமி. புண்ணிய ஸ்தலங்கள் அதிகம் நிறைந்த இடமாகும். மற்ற நாட்டு மதத்தோடு இந்திய நாட்டில் இந்து மதமும் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடவுள்கள் தாய்லாந்து ஜப்பான் போன்ற நாடுகளில் உருவத்தில் ஒத்து் இருப்பதாக தெரிகிறது.

இதனால் பெரும்பாலானவருக்கு இந்து மதம் பிடிக்கும். இந்தியாவில் இருந்து வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களோ அல்லது தமிழர்களோ தாங்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு ஏற்ப கோயில்களை நிறுவி வழிபாடு செய்து வருகிறார்கள். சில இடத்தில் அரசாங்கமே இந்து மதத்தினர் கோயில் கட்டி வழிபாடு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
அதன்படி லண்டன் தாய்லாந்து அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இந்து மத கோயில்கள் நிறுவப்பட்டு சிறப்பான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்து வருகின்றது. இஸ்லாம் மதத்தை தழுவும் துபாய் நாட்டில் கூட இந்து மத கோவிலை கட்டி சமீபத்தில் திறந்து இருக்கிறார்கள். அதேபோல் தாய்லாந்தில் இருக்கும் மகா மாரியம்மன் கோவிலில் விஜயதசமிகு சிறப்பு திருவிழா நடத்தப்பட்டு இருக்கிறது.

இந்த தாய்லாந்து மகா மாரியம்மன் கோவிலில் இந்துக்கள் அனைவரும் ஒன்று கூடி மிகவும் கிராண்டாக விமர்சையாக இந்த திருவிழாவை நடத்தி இருக்கின்றனர். அம்பாளை தேரில் வைத்து வீதி உலாவும் எடுத்து சென்றிருக்கின்றனர். இதை தாய்லாந்து மக்கள் கண்டு ரசித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களும் அம்பாளை வணங்கி தரிசித்து விட்டு சென்றனர். தமிழர்கள் இத்திருவிழாவை சிறப்பாக செய்வதை பார்த்து அந்நாட்டு மக்களே வியப்படைந்து இருக்கின்றனர்.
