பணமோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த ரவீந்தர்…! நடந்த உண்மை இதுதான்…! திடுக்கிடும் வீடியோ வெளியிட்டு விளக்கம்…!

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்தர் சந்திரசேகரன். நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். இவர்  சின்னத்திரை சீரியல் நடிகையான மகாலட்சுமியை திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி இருவருக்கும் இது இரண்டாவது திருமணமே.  திருமணத்திற்கு பிறகு இருவரும் ஏகப்பட்ட சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்து  வந்தனர்.இந்நிலையில் ஒரு மோசடி வழக்கில் ரவீந்தரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

   

 

திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஒரு ப்ராஜெக்ட்டில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக 16 கோடி ருபாய் அளவுக்கு ஏமாற்றி இருப்பதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.இந்த கைது செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. முதல் தடவை தள்ளுபடி செய்யப்பட்ட இவரது ஜாமீன் மனு இரண்டாவது முறை ஏற்றுக்கொள்ளப்பட்டு நிபந்தனை ஜாமீனுடன் தற்பொழுது வெளியில் வந்துள்ளார். ஜாமீனில் வெளிவந்த இவர் தற்பொழுது முதன்முறையாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், ‘என்னுடைய அம்மாவிற்கு பிறகு மகாலட்சுமி தான் எனக்கு கிடைத்த வரம்.

என்னிடம் இருந்து மகாலட்சுமியை யாராலும் பிரிக்க முடியாது. மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட போது மோசடி உட்காருவ, எப்படி எந்திருப்ப என்று மகா கேட்ட போது நான் நொறுங்கி போயிட்டேன். என்னுடைய உடம்பு மற்றவர்கள் உடம்பு போல ஈடு கொடுக்காது. எவ்வளவோ மகா எடுத்து சொல்லியும் என்னை கைது செய்து கொண்டு சென்று விட்டார்கள். நான் எந்த கொண்டு செய்யவில்லை. அவர்கள் தப்பான தொழில் செய்வது பற்றி நான் தெரிந்துகொண்டதால் விலகிவிட்டேன்.

இதனால் அவர் என்மீது தவறாக புகார் அளித்து, பழியை போட்டு இப்படி நயவஞ்சமாக பழி தீர்த்துக் கொண்டிருக்கிறார்’ என்று கூறினார். மேலும் அவர், முதல் சம்மனில் ஆஜராகி விட்டேன் அடுத்த சம்மன்களுக்கு என்னால் ஆஜராக முடியவில்லை. அதற்கு காரணம் தான் திடீரென கீழே விழுந்தது தான் எனக்கூறி வீடியோ ஒன்றை பேட்டியில் காட்டினார். இந்த வீடியோ தனது வீட்டின் சிசி டிவி கேமராவில் பதிவானது என்றும் கூறினார். சம்மன்களுக்கு ஆஜராக காரணத்தினால் தன்னை கைது செய்தததாக எமோஷனலாக கூறியுள்ளார் ரவீந்தர். இதோ அந்த பேட்டி…