சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் சுருதியை காணவில்லை என்று முத்துவும் மீனாவும் அங்கும் இங்கும் தேடி அலைகின்றனர். பார்ட்டிக்கு வந்த அனைவரும் ஸ்ருதி எங்கே எங்கே என்று கேட்பதால் ரவி மிகுந்த டென்ஷன் உடன் இருக்கிறார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.
இன்றைய எபிசோடில் ஸ்ருதி லாயரை பார்க்க சென்று இருப்பதாக அவர் தோழி கூறியதை கேட்டு அங்கே முத்துவும் மீனாவும் செல்கின்றனர். சுருதி அவர்களை பார்த்ததும் நான் டைவர்ஸ் அப்ளை பண்ண போறேன் என்று கூறுகிறார்.
உடனே முத்துவும் மீனாவும் நிலைமையை எடுத்து சொல்லி ரவி எந்த தவறும் செய்யவில்லை அவங்க ஓனர் கீழ விழுந்துட்டாங்க அவங்களால நடக்க முடியல அவங்கள தூக்கிட்டு வந்ததுதான் நீங்க தப்பா நினைச்சுக்கிட்டீங்க. பாவம் ரவி அங்க பார்ட்டி நடக்குற இடத்துல ரொம்ப டென்ஷனா உங்களை தேடிட்டு இருக்காரு என்று புரிய வைக்கின்றனர். உடனே ஸ்ருதி அப்படியா தான் தப்பு பண்ணிட்டேன் என்று ஒப்புக்கொள்கிறார். பிறகு அங்கிருந்து மூவரும் கிளம்புகின்றனர்.
பார்ட்டி நடக்கும் இடத்தில் எல்லோருக்கும் சந்தேகம் வந்துவிடுகிறது. அண்ணாமலையும் சுருதி இப்படி வராமல் இருக்க மாட்டா என்ன நடந்தது உண்மையை சொல்லு என்று ரவியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் சுருதி இந்த மாதிரி பங்க்ஷனுக்கு முதல் ஆளா வந்துடுவா இப்ப போன் கூட சுவிட்ச் ஆப்ல வேற இருக்கு எங்க கிட்ட உண்மைய சொல்லுங்க என்று எல்லோரும் ரவியை சூழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அந்த நேரத்தில் கரெக்டாக சுருதியை கூட்டிக்கொண்டு முத்துவும் மீனாவும் வந்து விடுகின்றனர். சுருதியை பார்த்தவுடன் ரவி மிகுந்த சந்தோசம் அடைந்து விடுகிறார். பிறகு ஸ்டேஜ்க்கு சென்று சந்தோஷமாக கேக் கட் செய்து தங்களது காதலைப் பற்றியும் முத்து மீனா எப்படி தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர் என்பதை பற்றியும் பேசுகின்றனர். குடும்பமே மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறது. பின்னர் பாட்டு கச்சேரி நடக்கிறது. சந்தோஷமான தருணங்களை குடும்பத்தினர் பகிர்ந்து கொள்கிறார்கள். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…