விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் வைல்டு கார்டு மூலம் கலந்து கொண்ட நடிகை அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார். பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் ஒரு வைல்டு கார்டு போட்டியாளர் டைட்டிலை வென்றது அதுதான் முதல் முறை. பிக் பாஸ் டைட்டில் வின்னரான அர்ச்சனாவும் டிவி சீரியல் நடிகரான அருண் பிரசாத் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாகவே கிசுகிசுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அருண் பிரசாத்தை பார்க்க அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் வைத்து அருண் தனது காதலியை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு அருண் அளித்த பேட்டியில் தங்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறியிருந்தார். இதனிடையே அருண் மற்றும் அர்ச்சனா இருவரும் இணைந்து பல பேட்டிகளை கொடுத்து வருகிறார்கள். அதன்படி சமீபத்தில் அருண் தனது குடும்பம் மற்றும் அர்ச்சனாவுடன் பிரபல சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் அருணின் தந்தை அர்ச்சனா மற்றும் அருண் காதல் பற்றி பேசியுள்ளார். அதில், இந்த நிமிஷம் வரைக்கும் எங்க பையன் அருண் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்று எங்ககிட்ட சொன்னதே இல்ல.
அவங்க ரெண்டு பேரும் ஒரு முறை கூட எங்களிடம் அனுமதியோ அல்லது தாங்கள் காதலிப்பது தொடர்பான தகவலையோ கூறவில்லை. எங்களுக்கு இந்த விஷயம் இலைமறைகாயாக தெரிந்தது. அருணுக்கு ஒரு பெண்ணை பிடிக்கிறது என்றால் நிச்சயமாக நாங்கள் அதற்கு ஓகே என்று தான் கூறுவோம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனாவை காதலிப்பதை அருண் சொன்ன பிறகு தான் எங்களுக்கே விஷயம் தெரிந்தது. அர்ச்சனா எங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து போவாங்க. அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற விஷயம் எங்களுக்கு தெரிந்த மிகவும் பழைய விஷயம். புதிதாக எங்களுக்கு யாரும் சொல்ல வேண்டியதில்லை.
சமீபத்தில் வடபழனி முருகன் கோவிலில் எங்களுக்கு எளிமையாக அறுபதாம் கல்யாணம் நடந்தது. அதனை அர்ச்சனாவும் அருணும் மட்டும்தான் செய்து வைத்தார்கள். நானும் என்னுடைய மனைவியும் எங்க பையன் கிட்ட எதையும் மறைச்சதில்லை. ஆனா அவன் அர்ச்சனாவை காதலிப்பதை என்கிட்ட சொல்லவே இல்லை என்று பேசினார். இதனை தொடர்ந்து அருண் அந்த பேட்டியிலேயே தன்னுடைய அப்பா அம்மாவிடம் அர்ச்சனாவை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி சம்மதம் கேட்டார்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…