Categories: சினிமா

நான் படங்களில் தொடர்ந்து நடிக்க காரணமே இதுதான்.. வெளிப்படையாக பேசிய இயக்குனர் கௌதம் மேனன்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் கௌதம் மேனன். இவர் தன்னுடைய ஒவ்வொரு படத்தையும் மக்கள் மத்தியில் வித்தியாசமாக காண்பிக்க கூடியவர். காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் படம் எல்லாம் சூர்யாவுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் படங்களாகும். அதனைப் போலவே கமல்ஹாசன், அஜித் மட்டும் தனுஷ் என்ன பலரையும் தன்னுடைய படங்களில் படு ஸ்டைல் ஆக கௌதம் மேனன் காட்டியிருப்பார். ஸ்டைலிஷ் ஆக மட்டுமல்லாமல் தன்னுடைய திரைக்கதை, வசனம் மற்றும் மேக்கிங் மூலம் அசரடிப்பார். இவர் இயக்கிய மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட காதல் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்னர்.

இப்படி பிசியாக இருந்தால் கௌதம் மேனன் இடையில் சில பிரச்சனைகள் வந்ததால் இயக்கத்தில் இருந்து ஒதுங்கினார். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்திருக்கும் அவர் சிம்புவை வைத்து இயக்கியிருந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. நடிப்பில் கவனம் செலுத்தி வந்த கௌதம் மேனன் மீண்டும் தற்போது மம்மூட்டியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.  இதனிடையே கெளதம் மேனன் சூர்யாவை வைத்து துருவ நட்சத்திரம் திரைப்படத்தை 2010 ஆம் ஆண்டு தொடங்கினார். ஆனால் கதையில் உடன்பாடு இல்லாததால் அப்பிடத்திலிருந்து சூர்யா விலகினார்.

பிறகு ரஜினியிடம் கதையை கூறிய நிலையில் அவரும் அடிக்கவில்லை. பிறகு விக்ரம் இப்படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டு 2016 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. சில தடைகளால் படப்பிடிப்பு தடைபட்ட நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு படப்பிடிப்பை முடித்து விட்டனர். ரிலீஸ் செய்வதிலும் பல சிக்கல்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் அந்தப் படத்தில் பல லட்சம் ரூபாய் பணம் முடங்கி கிடப்பதால் அந்த கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைப்பதற்காகவே கௌதம் மேனன் படங்களில் நடித்து வருவதாக கூட சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது.

இப்படியான நிலையில் தான் படங்களில் நடிக்க என்ன காரணம் என்பது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கௌதம் மேனன் பேசியுள்ளார். அதில், நான் படங்களில் தொடர்ந்து நடிக்க காரணமே அதில் இருந்து வரக்கூடிய பணத்தை வைத்து துருவ நட்சத்திரம் படத்திற்காக செலவு செய்த கடனை அடைத்து விடலாம் என்பதற்காகத்தான். அந்த ஒரு படம் ரெடி பண்ணி சென்சார் பண்ணி வச்சிட்டா, தியேட்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் OTT என எல்லாவற்றிலும் இருந்தும் நமக்கு பணம் வரும். அந்த ஒரு படம் ரிலீஸ் ஆகிட்டா மொத்த பிரச்சனையும் முடிஞ்சிடும். நான் தொடர்ந்து சில படங்களில் நடித்ததற்கான காரணமே இதுதான். நடிப்பதன் மூலம் வரும் பணத்தை அப்படியே அங்கு கொடுத்திடுவேன். படம் ரிலீஸ் ஆகாம அப்படியே இருக்கும்போது அதை வைத்து என்ன பண்ண முடியும். அதனாலதான் நடிச்சிட்டு இருக்கேன் என்று கௌதம் மேனன் ஓபன் ஆக பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

20 minutes ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

21 minutes ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

34 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

58 minutes ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

1 மணத்தியாலம் ago