வாய்ப்பில்லை…! “நான் உயிரோடு இருக்கும் வரை அது நடக்காது…” மாமியார் பேச்சுக்கு ரவி மோகனின் நெஞ்சை பிளக்கும் பதில்…!!

By Devi Ramu on ஆவணி 3, 2026

Spread the love

நடிகர் ரவி மோகனின் மாமியார் சுஜாதா அளித்த பேட்டியில், தாங்கள் தனியாக 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்கவில்லை என்றும், ரவி வைத்துவிட்டுச் சென்ற கடன்கள், வீட்டின் தவணைத் தொகை மற்றும் பிள்ளைகளின் ஆண்டுப் பள்ளிக் கட்டணமான 86 லட்சம் ரூபாய் ஆகியவற்றைச் சேர்த்தே அந்தத் தொகை வருவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், நீதிமன்ற உத்தரவுப்படி ரவி மோகனுக்குத் தன் மனைவியும் பிள்ளைகளும் மாதம் 5 லட்சம் ரூபாய் பராமரிப்புத் தொகையாக வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், ரவியின் வீட்டிற்குப் பிள்ளைகளை அனுப்ப முடியாது என்றும், அவர்கள் பொது இடத்திலேயே சந்திக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தார்.

மாமியாரின் இந்த நிபந்தனைகளுக்கும் கருத்துகளுக்கும் சமூக வலைதளப் பதிவு மூலமாகப் பதிலளித்துள்ள ரவி மோகன், சிலர் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்புக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படுவது வருத்தமளிப்பதாகக் கூறியுள்ளார். “நான் உயிரோடு இருக்கும் வரை நாங்கள் 4 பேரும் ஒரே அறையில் மீண்டும் ஒன்றாக இருக்கவே மாட்டோம்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த அவர், தனக்கு ஆதரவாக இருக்கும் உண்மையான நண்பர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், நண்பர்களைப் புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுக்குமாறும் ரசிகர்களுக்குக் கேட்டுக்கொண்டுள்ளார்.