பிரபல நடிகரான ரவி மோகன் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டானார்.
சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து விவாகரத்து கேட்ட பிரச்சனை குறித்து தான் பரபரப்பாக பேசி கொண்டிருக்கின்றனர். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் ரவி மோகன் தனது மனைவியை பிரிவதாக முடிவு எடுத்தார்.
இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பாடகி கெனிஷா என சோசியல் மீடியாவில் பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் ஐசரி கணேஷ்யின் மகள் திருமணத்தில் ரவி மோகன் கெனிஷாவுடன் பங்கேற்றார். அது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது ரவி மோகன் கெனிஷாவுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இந்த புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
