தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களும் காதலர்களுக்காக திறந்தே இருக்கும். காதலிக்கும் அனைவருக்கும் சாதி மறுப்பு திருமணங்கள் செய்து வைக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். காதல் திருமணம் செய்து கொள்பவரையும் மற்றும் சாதி மாற்றத்தில் காதலிப்போரையும் ஒரே வருடத்தில் மட்டும் நெல்லையில் 240 கொலைகள் நிகழ்ந்துள்ளது.
வழக்குப்பதிவு செய்தது மட்டும் 240 வழக்குகள். கணக்கில் இல்லாதது எவ்வளவோ தெரியவில்லை நிலைமை கை மீறி செல்கிறது. சுற்றுவட்டாரத்தில் ஆணவக் கொலைகள் நிறையவே நடந்து வருகிறது. இந்த சூழலை புரிந்து கொண்டு அரசு சாதி ஆணவக் கொலையை தடுக்கும் சட்டத்தை கொண்டு வர வேண்டும். வருகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரிலையே முதலமைச்சர் சாதி ஆணவக் கொலைத் தடுப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று சமூகவலைத்தளப் பதிவில் பெ. சண்முகம் அவர்கள் கூறியுள்ளார்.
