விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது . தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று சுவாரசியத்தை மேலும் கூட்டி வருகிறது. போட்டியாளர்களின் உறவினர்களும் ,குடும்பத்தினர்களும் தற்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ரவீனா -மணி இருவரின் குடும்பத்தார் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தது தான் தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ரவீனாவின் உறவினர் ரவீனாவை மணி உடன் பழகுவது குறித்து கண்டித்தார். ‘இப்படி ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கத்தான் இந்த ஷோக்கு வந்தீங்களா? மீண்டும் இனிமேல் இப்படி ரவீனா கூட இருக்காது என்று மணியையும் கண்டித்தார்.
இதை தொடர்ந்து ரெட் என கோட் வேர்டு வைத்து பேசியதால் பிக் பாஸ் வீட்டை விட்டு அதிரடியாக வெளியேற்றவும்பட்டார். ஆனால் மணியின் அம்மாவோ ரவீனா-மணி காதலுக்கு பச்சை கொடி காட்டுவது போலவே பேசி இருந்தார். இந்நிலையில் ரவீனாவின் அம்மா பிக் பாஸ் வீட்டிற்கு வராமல் உறவினர் வந்தது ஏன்? எனவும் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இது குறித்து தற்பொழுது ஷகிலா பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, ‘ ரவீனாவின் அம்மாவை பார்க்கும் பொழுது அவர் மிகவும் Calm Type போல தெரிகிறது. என் பிள்ளைக்கு அது பிடிக்கும். இது பிடிக்கும் என்று தனது ஒரே பெண்ணை செல்லமாக தனது மகளை வளர்த்துள்ளார் என்றும், மேலும் அவர் ஏன் பிக் பாஸ் வீட்டுக்குள்ள வரல என்பது நமக்கு தெரியாது. அது ரவீனா வெளியே வந்தால் தான் தெரியும். ரவீனா மணி ரிலேஷன்ஷிப் பத்தி அவங்க உறவினர் வந்து அப்படி பேசியது கண்டிப்பா எனக்கு ஒரு டிராமா மாறி தான் தெரியுது’ என்றும் கூறியுள்ளார்.