TRENDING
இது சினிமா இல்ல.. இதோட எல்லாத்தையும் நிறுத்திக்கோங்க.. சூர்யா பட இயக்குநருக்கு எச்சரிக்கை விடுத்த பிரேமலதா விஜயகாந்த்..
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் சமீபத்தில் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பல நாட்கள் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பினார். அப்போது சில தினங்களில் தேமுதிக கட்சி கூட்டத்தில் விஜயகாந்த் கலந்துக்கொண்டார். அப்போது அவர் நாற்காலியில் அமரக்கூடிய முடியாமல் விழுந்து விடுபவரை போல பலவீனமாக இருந்தார். அதை பார்த்த தேமுதிக கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கதறி கதறி அழுதனர். இதைப் பார்த்த இயக்குநர் பாண்டிராஜ், மனதுக்கு பிடித்த அவரை இப்படி பார்க்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது. தயவு செய்து அவரை ஓய்வில் இருக்க விடுங்கள், இப்படி கஷ்டப்படுத்தாதீர்கள் எனக் கூறியிருந்தார்.
சமீபத்தில் அதுகுறித்து தேமுதிக கட்சியின் பொருளாளர், விஜயகாந்த் மனைவி பிரேமலதா ஒரு நேர்காணலில் கூறியதாவது, விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது சில சமூக வலைதளங்களில் அவரை பற்றிய தவறான செய்திகளை கூறினர். அவருக்கு செயற்கை சுவாசம் தரப்படுகிறது. ஸ்டீராய்டு ட்ரீட்மென்ட் தரப்படுகிறது. அவர் இருப்பதே சந்தேகம்தான் என்றெல்லாம் அவதூறு பரப்பினர். அவரது மனைவியாக இதை பார்த்து நான் மிகவும் வேதனைப்பட்டேன். ஒரு கட்சியின் தலைவர் பற்றி இப்படி எல்லாம் அவதூறு பரப்புவது, வதந்தி பரப்புவது மிகப்பெரிய தவறு என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். கட்சி தொண்டர்களுக்காக நான் அவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டால், பழைய புகைப்படங்கள் என்று விமர்சனம் செய்கிறீர்கள். அது தொண்டர்களுக்காக வெளியிட்டது. விஜயகாந்த் நிலைமைக்காக அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு ஏதும் தவறான முடிவுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக தான்.
தேமுதிக தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாவது பெரிய கட்சி. அந்த கட்சியின் செயற்குழு, பொதுக்குழு நடக்கும்போது கட்சியின் தலைவர் கட்டாயம் அதில் பங்கேற்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. அந்த அடிப்படையில் தலைவர் அங்கு வருகை தந்தார். மேடையில் அமர்ந்திருந்தார். கட்சியினரை சந்தித்தார். இதில் அவரை கஷ்டப்படுத்த ஒன்றுமில்லை. இயக்குநர் பாண்டிராஜ், இதுபற்றி பேசியிருந்தார். கேப்டனை பார்த்துக்கொள்ள எங்களுக்குத் தெரியும்.
இது ஒன்றும் சினிமா அல்ல. கட்சி. செயற்குழு, பொதுக்குழுவில் தலைவர் பங்கேற்பதே நியதி. படத்தில் ரூ. 10 லட்சம் கூடுதலாக செலவு செய்ய தயாரிப்பாளர், கேமராமேன் என எத்தனை பேரிடம் நீங்கள் அனுமதி வாங்க வேண்டும் என்பதை யோசித்து பாருங்கள். ஏதோ பதிவு போட வேண்டும் என்பதற்காக போடாதீர்கள் என்று கோபமாக பதில் கூறியிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த.