படம் எடுப்பதாக கூறி 25 ஆயிரம் பேரிடம் ரூ.6 கோடி வசூல்.. ஷூட்டிங்கே ஆரம்பிக்காமல் ஏமாற்றினார்களா கோபி – சுதாகர்..?? நடந்தது என்ன?

By admin on மார்கழி 22, 2023

Spread the love

சமூக வலைதளங்களில் பலரும் சொந்தமாக யூடியூப் சேனல் துவங்கி, அதில் சமூக பிரச்னைகளை, அரசியல் விஷயங்களை, குடும்ப உறவுகளை மையப்படுத்தி பலவிதமான கண்டென்டுகளில் வீடியோக்களை பதிவிட்டு பார்வையாளர்கள் மத்தியில் வெகுவிரைவில் செலிபிரட்டி ஆகின்றனர். அதுபோல் ரீல்ஸ், டிக்டாக் மூலமாகவும் பிரபலமானவர்கள் பலர் உண்டு. அந்த வகையில் நக்கலைட்ஸ், பரிதாபங்கள் கோபி சுதாகர், ஜிபி முத்து, ரவுடி பேபி சூர்யா, சமையல் கலைஞர் ஆறுமுகம், சாப்பாட்டு ராமன் என பலரும் யூடியூப் வழி பிரபலமானவர்களாக இருக்கின்றனர். இதில் நக்கலைட்ஸ் அருண், பரிதாபங்கள் கோபி, சுதாகர், ஜிபிமுத்து போன்றவர்கள் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையே பெற்றது குறிப்பிடத்தக்கது.

   

இதில் பரிதாபங்கள் கோபி, சுதாகர் ஆகியோர் சினிமா, அரசியல், சமூக பிரச்னைகள், குடும்ப விஷயங்கள் என சகல விஷயங்களையும் தங்களது யூடியூப் வழியாக கொண்டு காமெடி கண்டெண்டுகளாக கொண்டு வந்து பார்வையாளர்களின் மனம் கவர்ந்தவர்கள். சமீபத்தில் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் பாவாடை போன்ற கவுன் ஆடையில் வந்ததை கிண்டலடித்த கோபி செய்த பிக்பாஸ் நிகழ்ச்சி, சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலானது. அந்த அளவுக்கு டைமிங் விஷயங்களை மிக ரசனையாக காமெடி கலந்து தருவதில் கோபி, சுதாகர் கெட்டிக்காரர்களாக இருக்கின்றனர். ஆனால் இவர்கள் படம் எடுப்பதாக கூறி, ரூ. 6 கோடி வரை ஏமாற்றினார்களா என்பது ஒரு விளங்காத புதிராகவே இருக்கிறது.

   

 

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில், சினிமா விமர்சகர் செய்யாறு பாலு கூறியதாவது, சினிமாவில் நடிக்கவும், அதற்கான திறமையும், நடிப்பாற்றலும் கொண்டவர்கள்தான் பரிதாபங்கள் கோபி, சுதாகர். அவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தங்களது ரசிகர்கள், பார்வையாளர்களிடம் இருந்து படம் தயாரிக்க போவதாக கூறியதை தொடர்ந்து, 25 ஆயிரம் பேரிடம் இருந்து 6 கோடி ரூபாய் வரை அவர்களுக்கு பணம் வசூலாகி இருக்கிறது. இவ்வளவு பெரிய தொகையை அவர்கள் பெற்றது பெரிய விஷயம். ஆனால் சொன்னபடி அவர்கள் படத்தை எடுக்கவில்லை. அதற்கான விஷயங்களும் நடக்கவில்லை.

ஆனால் இடையில் ஏதோ பிரச்னை ஏற்பட்டு படம் எடுப்பது தடைபட்டு இருக்கிறது. நிச்சயமாக மக்களை நாங்கள் ஏமாற்றவில்லை. படம் எடுக்கப் போகிறோம் என்றுதான் அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. கிரியேட்டர்கள் தயாரிப்பாளராக வரும்போது அதற்கான செலவுகளை கணக்கிட்டு பார்த்தால், படத்தை எடுக்கவே முடியாது. இவர்கள் கிரியேட்டர்களாக இருப்பதால், படத்தை தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது என அதில் கூறியிருக்கிறார் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு.