நவம்பர் 3 முதல் 6-ஆம் தேதி வரை… ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு…!!

By Devi Ramu on கார்த்திகை 1, 2025

Spread the love

தமிழக அரசு மக்களுக்கு பயன் தரும் வகையில் மாதம்தோறும் ரேஷன் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரிசி பருப்பு, கோதுமை சர்க்கரை பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. தற்போது முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கு சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் வருகிற நவம்பர் 3-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை முதியோர் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கு சென்று பொது விநியோகத் திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது சென்னையில் உள்ள ஆலந்தூர், அண்ணா நகர், பெருங்குடி, சோளிங்கநல்லூர், தேனாம்பேட்டை, திருவொற்றியூர், அடையார், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர், ராயபுரம், அம்பத்தூர், வளசரவாக்கம், கோடம்பாக்கம் ஆகிய 15 மண்டலங்களில் செயல்படும் 990 ரேஷன் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசிய பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.