குஷியோ குஷி… அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அக்டோபர் 10ஆம் தேதிக்குள்… தமிழக அரசு குட் நியூஸ்…!

By Nanthini on ஐப்பசி 1, 2025

Spread the love

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் இந்த மாதத்திற்கான உணவுப் பொருள்களை வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

அதனால் ரேஷனில் பச்சரிசி, பாமாயிலுக்கு தேவை அதிகம் இருக்கும். அத்துடன் பலர் முன்கூட்டியே சொந்த ஊர்களுக்கு செல்வர். இதனை கருத்தில் கொண்டு ஒரே தவணையில் விநியோகம் செய்ய கூட்டுறவு மற்றும் உணவுத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த செய்தி ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.