மறைந்த பாடகி பரவை முனியம்மாவின் மாற்றுத்திறனாளி மகன்…! குடும்பத்தின் தற்போதைய நிலை….? உருக்கமாக பேசிய மருமகள்….!!

By Devi Ramu on ஐப்பசி 1, 2025

Spread the love

மறைந்த பாடகி பரவை முனியம்மா விக்ரம் நடிப்பில் ரிலீசான தூள் திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்தில் இடம்பெற்ற சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இதனையடுத்து காதல் சடுகுடு, கோவில், தேவதையை கண்டேன், சண்டை, தோரணை, வேங்கை, வீரம், மான் கராத்தே உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பரவை முனியம்மா நடித்துள்ளார். உடல் நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரவை முனியம்மா கடந்த 2020-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

சமீபத்தில் பரவை முனியம்மாவின் மருமகள் ஒரு பேட்டியில் பல அனுபவங்களை கூறியுள்ளார். அதில் பெண் பிள்ளைகளை எல்லாம் கஷ்டப்பட்டு எனது அத்தை கரை சேர்த்துட்டாங்க. கஷ்ட காலத்தில் இருந்த பணத்தை செலவு செய்து விட்டார்கள். அவரது மாற்றுத்திறனாளி மகனை நான் தான் அம்மாவாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்றால் அவனுக்கு ஒரு வேலை கிடைக்க உதவி செய்யுங்க. எங்க பிள்ளைங்க படிப்புக்கு ஏதாவது உதவி செய்யுங்க. வேற எதுவும் நான் கேட்கல என உருக்கமாக பேசி உள்ளார்.