பிரபல நடிகரான ரோபோ சங்கர் கலக்கப்போவது யாரு, அது இது எது என ஏராளமான காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். இவர் அஜித், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படத்திலும் நடித்துள்ளார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு உடல் நலம் தேறி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
யாரும் எதிர்பாராத விதமாக கடந்த செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி ரோபோ சங்கர் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ரோபோ சங்கரின் நண்பர்களும், உறவினர்களும் பல அனுபவங்களை பகிர்ந்தனர். அதில் பேசிய இந்திரஜா சங்கர் கூறியதாவது, தந்தை இல்லாத போது தான் தெரியும். உலகிலேயே எல்லா சொந்தமும் அவர் இருந்தால் தான் நிலைக்கும். இல்லாவிட்டால் நடிக்கும் என கூறியுள்ளார்.
