தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் தங்களது KYC விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, மாநிலத்தில் இன்னும் 36 லட்சம் பேர் விரல் ரேகைப் பதிவை (e-KYC) மேற்கொள்ளாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. எனவே, இதுவரை விரல் ரேகையைப் பதிவு செய்யாதவர்கள், தங்களின் ரேஷன் கடைகளுக்குச் சென்று உடனடியாக இப்பணியை நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
