மலேசியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித்தைக் காண ரசிகர்கள் அங்கு அதிக அளவில் திரண்டு வருகின்றனர். பந்தயக் களத்தில் அவர் நடந்து சென்றபோது, ரசிகர் ஒருவர் ‘தல’ என்று உரத்த குரலில் கத்தியதால், அங்கிருந்த பிற வீரர்களுக்கு இடையூறு ஏற்படுவதை அஜித் உணர்ந்தார்.
உடனே அந்த ரசிகரைத் திரும்பிப் பார்த்த அஜித், அமைதியாக இருக்கும்படி சைகை மூலம் எச்சரித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது கார் பந்தயங்களில் தீவிர கவனம் செலுத்தி வரும் அஜித், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் தனது 64-வது படத்தின் பணிகளில் ஈடுபடவுள்ளார்.
That Warning look of #Ajithkumar ..🔥 pic.twitter.com/1HOgO9fJm6
— Laxmi Kanth (@iammoviebuff007) December 19, 2025
இதற்கிடையில், அடுத்த வாரம் சென்னையில் நடைபெற உள்ள நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ பட இசை வெளியீட்டு விழாவிற்கு அஜித்திற்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை அஜித் இந்த விழாவில் கலந்து கொண்டால், அது தமிழ் திரையுலகில் ஒரு வரலாற்றுச் சம்பவமாக இருக்கும் என அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
