தமிழ்நாட்டில் ரேஷன் விநியோகத்தில் முறைகேடுகளைத் தவிர்க்கவும், போலி குடும்ப அட்டைகளைக் கண்டறிந்து நீக்கவும் உணவுப்பொருள் வழங்கல் துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைவிரல் ரேகை பதிவை வரும் ஜூன் 25-ஆம் தேதிக்குள் கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் என்று செங்கல்பட்டு மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் தற்போது மிக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, பணி நிமித்தமாகவோ அல்லது பல்வேறு காரணங்களுக்காகவோ வெளியூர்களில் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் பயோமெட்ரிக்கில் முழுமையாகப் பதிவாகவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ரேஷன் பொருட்கள் விநியோகிப்பதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதால், வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்களது தற்போதைய இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள எந்தவொரு நியாயவிலைக் கடைக்கும் (Ration Shop) நேரடியாகச் சென்று, வரும் ஜூன் 25-ஆம் தேதிக்குள் தங்களது கைவிரல் ரேகையைப் பதிவு செய்து தங்களின் உரிமையினை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனுடன், குடும்ப அட்டைகளில் உள்ள இறந்த உறுப்பினர்களின் பெயர்களை நீக்குவதற்கும் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குடும்பத்தில் யாரேனும் இறந்திருந்தால் அவர்களின் பெயர்களை வரும் 25.06.2026-க்குள் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி, உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருவேளை வட்ட வழங்கல் அலுவலகத்திற்குச் செல்ல இயலாதவர்கள், தங்களது பகுதியில் உள்ள நியாயவிலைக் கடை விற்பனையாளரிடம் இறந்த உறுப்பினரின் குடும்ப அட்டை எண்ணுடன், வழங்கிப் பெயரை நீக்க நடவடிக்கை எடுக்கலாம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கைரேகை பதிவு செய்யாதவர்கள் மற்றும் இறந்த உறுப்பினர்களின் பெயர்களை நீக்காதவர்கள் மீது உரிய விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால், பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விரைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, பிறந்து 56 நாட்களே ஆன தனது குழந்தையைத் தூங்க வைப்பதற்காக மின்விசிறியைப் போட்ட தந்தை…
தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர், ஜூன் 18, 2026 அன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களின் உரையுடன்…
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் நுழைவுவாயில் கான்கிரீட் பகுதி திடீரென இடிந்து விழுந்த விபத்தில், தாய்…
தி.மு.க. ஆட்சியில் 2022-ஆம் ஆண்டு மாணவர்களின் கல்வி, திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டது. அரசுப்…
நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முதல் காதல் குறித்துப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய…
கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ராசிபுரம் பகுதியில், தற்போது செயல்படாமல் இருக்கும் ஒரு…