Connect with us

CINEMA

தன்னைவிட 30 வயது மூத்த நடிகருடன் ஜோடி சேரும் ராஷ்மிகா மந்தனா.. பாலிவுட்டில் பிச்சுகிட்டு கொட்டும் வாய்ப்பு..!

நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமா மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். தற்போது பாலிவுட் சினிமாவில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரவுண்டு கட்டி அடித்து வரும் ராஷ்மிகா மந்தனா புஷ்பா திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய புகழை எட்டினார்.

 

   

அதில் ஸ்ரீவில்லி கதாபாத்திரத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் தற்போது ஆகஸ்ட் 15ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் வெளியாகியுள்ளது. இடைத்தொடர்ந்து பாலிவுட்டில் ரன்பீர் கப்பலுடன் இணைந்து அனிமல் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். தற்போது சல்மான் கானுக்கு ஜோடியாக புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தற்போது புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

அமிதாபச்சன் நடிப்பில் வெளியான குட் பை என்று திரைப்படத்தின் மூலமாக ஹிந்தியில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தொடர்ந்து பாலிவுட்டில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் தனுஷின் குபேரன் திரைப்படத்திலும் நடிகை ராஸ்மிகா மந்தனா நடித்து வருகின்றார். இந்தியாவில் தற்போது அதிக பட வாய்ப்புகளைக் கொண்ட டாப் நடிகையாக மாறி இருக்கிறார் ராஷ்மிகா வந்தனா.

அடுத்தடுத்து ஹிந்தி திரைப்படத்தில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகின்றது. கடந்த ஆண்டு சந்திப் ரெட்டி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படத்தில் நடித்திருந்தார். 900 கோடி வசூல் ஈட்டிய இந்த படம் ராஸ்மிகா மந்தனாவுக்கு மிகப்பெரிய படமாக மாறியது.

இதைத்தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள சிக்கந்தர் என்ற திரைப்படத்தில் சல்மான்கான் ஹீரோவாக நடிக்கின்றார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா இணைந்துள்ளதாக எக்ஸ் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் பலரும் ராஷ்மிகாவுக்கு அடிச்சது லக்கு என்று கூறி வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top