நாளை கவின் நடிப்பில் இளன் இயக்கியுள்ள ஸ்டார் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் டைட்டில் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் நல்ல கவனிப்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் இளன் தன்னுடைய தந்தையின் வாழ்க்கைப் போராட்டத்தைதான் சில மாறுதல்களோடு இயக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இளனின் அப்பா தன்னுடைய 55 ஆவது வயதில்தான் தன்னுடைய முதல் நடிப்பு வாய்ப்பைப் பெற்றார். அதை தான் ஒரு சினிமாவில் நடிக்க ஆசைப்படும் இளைஞனின் வாழ்க்கையை உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் பற்றி சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. ஸ்டார் என்ற தலைப்பில் பிரசாந்த், ஜோதிகா, ரகுவரன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் 2001 ஆம் ஆண்டு ஒரு படம் ரிலீஸானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் பாடல்கள் ஹிட்டாகின. இன்றளவும் கேட்கப்படும் சூப்பர்ஹிட் பாடல்களாக உள்ளன.
இந்நிலையில் ஸ்டார் படத்தின் தயாரிப்பாளரான விஜய்கிருஷ்ணா என்பவருக்கு தற்போது அதே டைட்டிலை பயன்படுத்தியுள்ள தயாரிப்பாளர்கள் எந்தவொரு தொகையும் தரவில்லை என்று சொல்லப்படுகிறது. நலிந்து போன தயாரிப்பாளராக உள்ள அவர் தன் டைட்டிலைப் பயன்படுத்தியதற்கு எதாவது ஒரு குறைந்த பட்ச தொகையாவது எதிர்பார்க்கிறாராம்.
இது சம்மந்தமாக வழக்குக் கூட தொடுக்க முடியாத பொருளாதார சூழல் இல்லையாம். அதனால் எதாவது ஒரு தொகை கிடைத்தால் தனக்கு உதவியாக இருக்கும் என புலம்பியுள்ளாராம். இதை சினிமா பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு ஒரு வீடியோ மூலமாக பேசி கவனம் ஈர்த்துள்ளார்.
இதே போல தற்போது ரஜினி படத்துக்கு கூலி என்று தலைப்பு வைக்கப்பட்டது. அதே பெயரில் சில 30 ஆண்டுகளுக்கு முன்னர் சரத்குமார் நடிப்பில் ஒரு படம் வந்தது. அதை மாணிக்கம் நாராயணன் தயாரித்திருந்தார். இப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவரிடம் முறையாக பேசி அவருக்கு ஒரு தொகையைக் கொடுத்து அந்த தலைப்பை வாங்கிக் கொண்ட சம்பவமும் நடந்துள்ளது.