ஆந்திரா மற்றும் கேரளாவை சேர்ந்த நடிகைகள் மட்டுமே அதிகம் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக தமிழகத்தை சேர்ந்த நடிகைகள் பல திரையுலகில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர்.
அதன்படி திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட நடிகை ரம்யா பாண்டியன் சினிமாவில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இவருடைய சித்தப்பா அருண் பாண்டியன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தாலும் அவருடைய உதவியை நாடாமல் தனியாக வாய்ப்பு தேடி தன்னுடைய முயற்சியில் வெற்றியும் கண்டார்.
இவர் ஜோக்கர் திரைப்படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாகவும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தும் அசத்தினார்.
இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்ற போதும் ரம்யா பாண்டியனுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து பட வாய்ப்பு பிடிக்க போட்டோ சூட் நடத்துவதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
இதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதனை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கின. தற்போது இவருக்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்த நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் யோகா பயிற்சியாளர் லவல் தவான் என்பவரை காதலித்து வருவதாகவும் அவருடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் கடந்த வாரம் ரிஷிகேஷில் உள்ள சிவ்புரி கோவிலில் திருமணம் நடந்து முடிந்தது.
இதனை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அனைவரும் ரம்யாபாண்டியனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது ஜோதா அக்பர் கெட்டப்பில் தன்னுடைய கணவரோடு எடுத்த க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…
ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…
பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு, அரபு நாடுகளின் சில கிராமப்புறப் பகுதிகளில் "ஹயாம்" என்ற விசித்திரமான நோய் பாதிப்பு…
திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் முதன்மை அரசு வழக்கறிஞராக, ஆடு திருடிய வழக்கில் கைதாகி சிறை சென்ற வழக்கறிஞர் ஷேக்…
சென்னையில் உள்ள ஒரு ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், சக ஆண் பயணி ஒருவர் தன்னைத் தொடர்ந்து 20…
மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மொரினோ பகுதியில், மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் நபர்களை ஒரு…