Categories: சினிமா

நட்புக்கு மரியாதை கொடுப்பதில் அஜித் என்னைக்குமே சூப்பர்தான்… இயக்குனர் ரமேஷ் கண்ணா பகிர்ந்த சம்பவம்!

Spread the love

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் கதாசிரியராகவும் அறியப்படுபவர் ரமேஷ் கண்ணா. ஆனால் இவர் ஒரு இயக்குனர் என்பது பலரும் அறியாதது. அது மட்டுமில்லாமல் இவர் ஒரே ஒரு படம் மட்டும்தான் இயக்கியுள்ளார்.

ரமேஷ் கண்ணா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். பல துணை மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார் ரமேஷ் கண்ணா. ஆர் எஸ் மனோகரின் நாடக குழுவில் தனது ஐந்து வயது முதல் 10 வயது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ரமேஷ் கண்ணா. அப்போது இந்திய குடியரசு தலைவராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களால் பாராட்டையும் பெற்றவர் ரமேஷ் கண்ணா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒருவகையில் எம் ஜி ஆருக்கு உறவினர்.

ஆரம்பத்தில் ரமேஷ் கண்ணா காரைக்குடி நாராயணன், பாண்டியராஜன், விக்ரமன், கே எஸ் ரவிக்குமார் ஆகிய இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். 1998 ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரமன் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் தான் நடிகர் கார்த்திக்கு நகைச்சுவை நண்பராக ரமேஷ் கண்ணாவை திரையுலகில் அறிமுகம் செய்து வைத்தார் விக்ரமன். அதிலிருந்து நகைச்சுவை நடிகராகவே தனது பயணத்தை சினிமாவில் தொடர்ந்தார் ரமேஷ் கண்ணா.

ரமேஷ் கண்ணா இயக்கிய முதல் படம் ரிலீஸாகவே இல்லை. அதன் பின்னர் அவர் பல படங்கள் தொடங்கினாலும் அவை எல்லாம் கிடப்பில் போடப்படும். அல்லது ஷூட்டிங்கே நடக்காது. இப்படி 10 ஆண்டுகளுக்கு மேல் சென்றதால் ரமேஷ் கண்ணா ராசியில்லாத இயக்குனர்  என்றும் அவரை இயக்குனராக போட்டால் அந்த படம் ரிலீஸே ஆகாது என்றும் ஒரு பிம்பம் அவரைப் பற்றி உருவானது.

ஆனாலும் இந்த இமேஜைப் பற்றி கவலைப்படாமல் அஜித் ரமேஷ் கண்ணாவுடனான நட்பின் காரணமாக தொடரும் படத்தை அவருக்கு வழங்கினாராம். அந்த படத்தின் கதையைக் கூட கேட்காமல் அவர் நடித்துக்கொடுத்தாராம். அதுதான் அஜித் நண்பர்களுக்குக் கொடுக்கும் மரியாதை என ரமேஷ் கண்ணா நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

vinoth

Recent Posts

பகீர்..! விளையாட்டில் ஏற்பட்ட மோதல்.. 12 வயது சிறுவனின் கண்களை குத்திக் கிழித்த கொடூரம்.. பக்கத்து வீட்டாரின் கொடூரச்செயல்..!!

பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…

6 minutes ago

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

58 minutes ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

1 மணத்தியாலம் ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

1 மணத்தியாலம் ago

“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…

1 மணத்தியாலம் ago