Categories: சினிமா

“டிஸ்கஷன்ல சேரன் ஒரு சீன் கூட சொல்லமாட்டான்… ஆனா?” … ரமேஷ் கண்ணா பகிர்ந்த தகவல்- இவங்களுக்குள்ள இப்படி ஒரு நட்பா?-

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர், கதாசிரியர், இயக்குனர் மற்றும் வசனகர்த்தா என பன்முகத்திறமை கொண்டு விளங்குபவர் ரமேஷ் கண்ணா. இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரின் இணை இயக்குனராக ரஜினிகாந்தோடு பல படங்கள் வேலை செய்துள்ள அவர் தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களோடும் நடித்துள்ளார்.

இதில் அவர் அதிகமாக நடித்தது நடிகர் அஜித்தோடுதான். இதனால் அவர் அஜித்துக்கு நெருங்கிய நண்பர் என்ற பிம்பம் உள்ளது. வீரம் படத்தின் டைட்டில் கார்டில் கூட  அஜித்தின் ஆல்டைம் நண்பர் ரமேஷ் கண்ணா என்றுதான் டைட்டில் போட்டார்கள்.

இந்நிலையில் ரமேஷ் தற்போது சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் கே எஸ் ரவிக்குமாரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய போது அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சேரனுடனான நட்பு குறித்து பேசியுள்ளார்.

அதில் “நான் கே எஸ் ரவிக்குமாரிடம் பணியாற்றும் போது சேரன் வருவான். தீவிரமாக யோசிப்பான். ஆனால் எந்த சீனும் சொல்ல மாட்டான். ஆனால் அவன் எடுத்த படமெல்லாம் சிறந்த படங்கள். அதைப் பார்த்த போது என்னடா இவன் இப்படி படம் எடுத்திருக்கான் என தோன்றியது. அப்போது நினைத்துக் கொள்வேன் ‘இவன் சீன் எதுவும் சொல்லாமல் எல்லா நல்ல சீனையும் தன் படத்துக்கு வச்சிகிட்டான்’ என்று.

அவன் பாரதி கண்ணம்மா எடுத்த போது முக்கியமான காட்சியின் ஷூட்டிங்கின் போது அவனுக்கு மஞ்சள் காமாலை வந்துவிட்டது. அப்போது அந்த காட்சியை எலலாம் நான்தான் படமாக்கினேன். அந்தளவுக்கு எனக்கு அவனோடு நெருக்கமான நட்பு இருந்தது.

அவன் காசுக்கு கஷ்டப்பட்ட போது நான் நிறைய தடவை உதவி இருக்கிறேன். அதை அவனிடம் உதவி இயக்குனராக இருந்த சிம்புதேவன் என்னிடம் சொல்லி நினைவுபடுத்தினார். இப்படி நாம் செய்யும் நல்லவை சில நேரம் அதற்கான பயனைக் கொடுக்கும்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

பகீர்..! விளையாட்டில் ஏற்பட்ட மோதல்.. 12 வயது சிறுவனின் கண்களை குத்திக் கிழித்த கொடூரம்.. பக்கத்து வீட்டாரின் கொடூரச்செயல்..!!

பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…

13 minutes ago

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

1 மணத்தியாலம் ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

1 மணத்தியாலம் ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

1 மணத்தியாலம் ago

“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…

1 மணத்தியாலம் ago