Categories: சினிமா

உலகத்துலயே சிரிச்சுகிட்டே ரேப் சீன்ல நடிச்ச ஒரே நடிகர் நான்தான்…  மைக் மோகன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் 80 களில் தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்து வெள்ளி விழா நாயகனாக வலம் வந்தவர் மோகன். பல படங்களில் பாடகராக இவர் தோன்றி நடித்ததால் இவரை ரசிகர்கள் செல்லமாக மைக் மோகன் என்றே அழைத்து வந்தனர்.

கர்நாடகாவைப் பூர்விகமாகக் கொண்ட மோகனை பாலு மகேந்திரா தன்னுடைய கோகிலா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார். அந்த படம் தமிழ் நாட்டிலும் நன்றாக ஓடிய நிலையில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.

அவரின் மூடுபனி, பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சல்கள்,  நூறாவது நாள், மௌன ராகம் உள்ளிட்ட ஏராளமான படங்கள் வெள்ளிவிழாக் கண்டன. அதனால் ரஜினி, கமலுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக விளங்கினார்.

ஆனால் 90 களுக்குப் பிறகு அவருக்கான மார்க்கெட் குறைய ஆரம்பித்தது. அதனால் 90 களில் இருந்து அவர் அதிகமாக படங்களில் நடிக்கவே இல்லை. இப்போது ஹரா மற்றும் தி கோட் ஆகிய படங்களின் மூலம் ரி எண்ட்ரி கொடுக்கிறார்.

இந்நிலையில் இப்போது அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் தன்னுடன் ஆரம்பகாலத்தில் நெருங்கி பழகியவர்கள் பற்றி பகிர்ந்துள்ளார். அதன் படி அவரோடு தொடக்க காலத்தில் அதிக படங்களில் நடித்த ஷோபா தனக்கு மிகவும் நெருங்கிய தோழியாக இருந்ததாக கூறியுள்ளார். அவர்கள் நட்புக்கு உதாரணமாக ஒரு சம்பவத்தையும் பகிர்ந்துள்ளார்.

அவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரு கன்னட படத்தில் மோகன், ஷோபாவை பாலியல் வல்லுறவு செய்வது போல காட்சி அமைக்கப்பட்டதாம். அந்த காட்சியில் நடிக்கும் போது இருவரும் சிரித்துக் கொண்டே நடித்தார்களாம். அந்த அளவுக்கு இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததாக அவர் கூறியுள்ளார். அவரின் இறப்பு யாருமே எதிர்பாராதது என்றும் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

புது ரூட்..! “இதை மட்டும் செய்யாதீங்க!”… ஆந்திராவில் நடந்த ரகசிய டீல்… உடைபட்ட உண்மை… விஜய்யை மாற்றிய சந்திரபாபு நாயுடு…!!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இடையேயான அண்மைய சந்திப்பு அரசியல்…

3 minutes ago

“இனி பழைய கதை வேணாம் விஜய்!”… ஆட்சிக்கு வந்து 6 மாசம் ஆச்சு… மாற்றம் எங்கே?… நேரில் சென்று பேசிய பிரேமலதா… வெடித்த புதிய விவாதம்…!!

அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் தவெகவை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர் என்று…

10 minutes ago

ஓட்டுகள் இனி இவர்களுக்கா?… சினிமா அரசியலுக்கு விழுந்த பெரிய அடி… விஜய்க்கு பயம் காட்டும் தனுஷ், SK… தமிழக அரசியலில் வெடிக்கப்போகும் அடுத்த சர்ச்சை…!!

தமிழகத்தில் சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது வழக்கமான ஒன்றாக உள்ள சூழலில், நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் அரசியலில் களம்…

22 minutes ago

திடீர் பல்டி அடித்த அண்ணாமலை… மென்மையான போக்கை கைவிட்டு அதிரடி மோதலுக்குத் திட்டம்… அதிரப்போகும் தமிழகம்..!

'வீ தி லீடர்ஸ்' அமைப்பைத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில், சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் சற்று மென்மையான மற்றும் அமைதியான போக்கையே…

52 minutes ago

FLASH NEWS: உருவானது அர்னாப் புயல்…. தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை…..!

மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின்…

54 minutes ago

மிஷின் எதுக்கு… நாங்களே பார்த்துக்கிறோம்… டோக்கியோ ரயில் நிலையத்தில் இறங்கிய ஆடுகள்… இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள யோட்சுயா ரயில் நிலையம், தண்டவாளப் பகுதிகளில் வளர்ந்துள்ள தேவையற்ற புற்களை இயற்கையான முறையில்…

57 minutes ago