உலகத்துலயே சிரிச்சுகிட்டே ரேப் சீன்ல நடிச்ச ஒரே நடிகர் நான்தான்…  மைக் மோகன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

By vinoth on ஆனி 8, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 80 களில் தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்து வெள்ளி விழா நாயகனாக வலம் வந்தவர் மோகன். பல படங்களில் பாடகராக இவர் தோன்றி நடித்ததால் இவரை ரசிகர்கள் செல்லமாக மைக் மோகன் என்றே அழைத்து வந்தனர்.

கர்நாடகாவைப் பூர்விகமாகக் கொண்ட மோகனை பாலு மகேந்திரா தன்னுடைய கோகிலா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார். அந்த படம் தமிழ் நாட்டிலும் நன்றாக ஓடிய நிலையில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.

   

அவரின் மூடுபனி, பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சல்கள்,  நூறாவது நாள், மௌன ராகம் உள்ளிட்ட ஏராளமான படங்கள் வெள்ளிவிழாக் கண்டன. அதனால் ரஜினி, கமலுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக விளங்கினார்.

   

ஆனால் 90 களுக்குப் பிறகு அவருக்கான மார்க்கெட் குறைய ஆரம்பித்தது. அதனால் 90 களில் இருந்து அவர் அதிகமாக படங்களில் நடிக்கவே இல்லை. இப்போது ஹரா மற்றும் தி கோட் ஆகிய படங்களின் மூலம் ரி எண்ட்ரி கொடுக்கிறார்.

 

இந்நிலையில் இப்போது அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் தன்னுடன் ஆரம்பகாலத்தில் நெருங்கி பழகியவர்கள் பற்றி பகிர்ந்துள்ளார். அதன் படி அவரோடு தொடக்க காலத்தில் அதிக படங்களில் நடித்த ஷோபா தனக்கு மிகவும் நெருங்கிய தோழியாக இருந்ததாக கூறியுள்ளார். அவர்கள் நட்புக்கு உதாரணமாக ஒரு சம்பவத்தையும் பகிர்ந்துள்ளார்.

அவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரு கன்னட படத்தில் மோகன், ஷோபாவை பாலியல் வல்லுறவு செய்வது போல காட்சி அமைக்கப்பட்டதாம். அந்த காட்சியில் நடிக்கும் போது இருவரும் சிரித்துக் கொண்டே நடித்தார்களாம். அந்த அளவுக்கு இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததாக அவர் கூறியுள்ளார். அவரின் இறப்பு யாருமே எதிர்பாராதது என்றும் கூறியுள்ளார்.