எதிர்நீச்சல் சீரியல் இன்றுடன் முடிவடையுள்ள நிலையில் இதற்கான காரணம் என்ன என்பது தொடர்பான தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களை போன்றே சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களையும் மகிழ்ச்சியாக தினம் தோறும் கண்டுகளித்து வருகிறார்கள்.
அதிலும் டிஆர்பி- யில் எப்போதும் முதலிடத்தில் இருந்த சீரியல் எதிர்நீச்சல் மாரிமுத்து மறைவுக்குப் பிறகு அந்த சீரியலின் வரவேற்பு சற்று குறைய தொடங்கியது. குணசேகரன் கதாபாத்திரத்தில் வேலராமமூர்த்தி நடித்து வந்தார், இருப்பினும் மாரிமுத்துவின் இடத்தை நிரப்ப முடியவில்லை, கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி ஒளிபரப்பான சீரியல் தான் எதிர்நீச்சல்.
இந்த சீரியலில் சத்திய பிரியா, மாரிமுத்து, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, கனிகா, மதுமிதா, விபுராமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். பெண்களின் அடிமைத்தனத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த சீரியல் பெண்களிடையே மட்டும் இல்லாமல் ஆண்கள் இடத்திலும் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. ஆரம்பத்தில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் தற்போது பெரிய அளவிற்கு வரவேற்பு இல்லாமல் இருந்து வருகின்றது.
சீரியலில் கதைக்களம் இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில் வேக வேகமாக இந்த சீரியலை முடிப்பதற்கு முடிவு செய்து இருக்கின்றன. இந்த சீரியலை கோலங்கள், மெட்டிஒலி போன்ற வெற்றிகரமான சீரியல்களை இயக்கிய திருச்செல்வம் இயக்கியிருந்தார். சீரியலின் இயக்குனரான திருச்செல்வத்தை பொறுத்தவரையில் தான் விரும்பியவாறு கதையை கொண்டு செல்ல வேண்டும் என்று என்பவர்.
ஆனால் சேனலில் குறித்த சுதந்திரம் முதலில் இருந்ததாகவும் தற்போது கதையை மாற்ற கோரி சேனல் தரப்பில் இருந்து வற்புறுத்துவராக கூறப்படுகின்றது. மாரிமுத்து கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் என்றாலும் அனைவருக்கும் மிகச் சரியான கதாபாத்திரத்தையே திருச்செல்வம் கொடுத்திருக்கின்றார்.
சேனல் தரப்பில் இருந்து கதையை மாற்று கோரி கூறுவதால் இயக்குனர் சம்மதம் தெரிவிக்கவில்லை. கடைசியில் ஒரே ஒரு மின்னஞ்சல் சேனல் தரப்பிலிருந்து திருச்செல்வத்திற்கு செல்ல அன்று இரவே சீரியலை முடிப்பதற்கு முடிவு செய்து இருக்கின்றார். அதன்படி இன்றுடன் சீரியல் முடிய உள்ளது என அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கின்றது.