“10 சீட் தர்றீங்களா.. இல்ல 51-ல தனியா நிக்கவா?”…. எடப்பாடிக்கு அத்வாலே கொடுத்த ‘ஷாக்’ ட்ரீட்…!

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், இந்திய குடியரசு கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தங்கள் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தக் கோரிக்கை குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

கூட்டணிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால், தலித் மக்கள் அதிகம் வசிக்கும் 51 தொகுதிகளில் தனது கட்சி தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக அத்வாலே அதிரடியாக அறிவித்துள்ளார். அவ்வாறு தனித்துப் போட்டியிட்டாலும், மீதமுள்ள தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே ஆதரவு அளிப்போம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். முன்னதாக ‘நாம் தமிழர்’ கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த ‘கரும்பு விவசாயி’ சின்னம் தற்போது தங்கள் கட்சிக்கு கிடைத்துள்ளதாகவும், அதன் நிறத்தை நீலமாக மாற்றிப் போட்டியிடப் போவதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் உள்ள தலித் தலைவர்களான தொல். திருமாவளவன், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் போன்றோர் ஒன்றிணைந்து ஒரு வலுவான கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும், அதற்கு மாயாவதி தலைமை தாங்க வேண்டும் என்றும் அத்வாலே அழைப்பு விடுத்தார். இத்தகைய ஒற்றுமை நிலவினால் மட்டுமே பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த முடியும் என்றும், பட்டியலின மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தமிழக அரசியலில் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தால் அது கூட்டணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். விஜய் போன்றவர்கள் இணைவதன் மூலம் திமுகவின் வெற்றியைத் தடுத்து, அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தேர்தல் நெருங்கும் வேளையில் ராம்தாஸ் அத்வாலேவின் இந்த 10 தொகுதி கோரிக்கை மற்றும் தனித்துப் போட்டி எச்சரிக்கை அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

4 மாசமா யாருக்குமே தெரியல… பர்தாவுக்குள் ஒளிந்திருந்த பகீர் உண்மை… 50 சவரன் நகையை நைசாக சுருட்டிய ‘நவநாகரீக’ பெண்… சென்னையில் அடுத்தடுத்து நடந்த அதிரடி கைதுகள்…!

சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நான்கு மாதங்களாக வாடிக்கையாளர் போல பர்தா அணிந்து வந்து, ஊழியர்களின்…

10 minutes ago

“உன் கழுத்தை அறுத்துடுவேன்டா”…பள்ளி சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை… சிக்கிய 3 காமுகர்கள்… நீதிமன்ற வளாகத்தில் ஆவேசமடைந்த தந்தை… கதிகலங்கி நின்ற போக்சோ கைதி…!

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…

49 minutes ago

இன்று நேரில் ஆஜராகாத செந்தில் பாலாஜி…. அடுத்த 24 மணி நேரத்தில் அதிரடியாக பாய்கிறதா கைது நடவடிக்கை?…. பரபரக்கும் தமிழக அரசியல்….!

தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…

57 minutes ago