“பல கோடிகளை இழந்துட்டோம், எங்களை நட்டாத்துல வித்துட்டாரோ?”… ராமதாஸ் மீது முன்னாள் MLA அருள் பாய்ச்சல்… பாமக-வில் திடீர் பூகம்பம்….!

By Nanthini on ஆனி 29, 2026

Spread the love

பா.ம.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கட்சித் தலைமை மீதான தனது ஆதங்கத்தையும் வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார். மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் சந்திப்பைத் தாங்கள் மனதார வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், அய்யா ராமதாஸை மட்டுமே நம்பிப் பயணித்து பல கோடிகளை இழந்திருப்பதாகக் கூறினார். தங்களுக்குச் சரியான வழிகாட்டுதல் இல்லாத ஏக்கத்தில் இருக்கும் கட்சியின் பொறுப்பாளர்களுடன் இணைந்து, விரைவில் சென்னையில் கூடி ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த இணைப்பு ஒரு வருடத்திற்கு முன்பே நடந்திருந்தால் பா.ம.க தனது அங்கீகாரத்தைத் தக்கவைத்திருக்கும் என்றும், தற்போது வாக்காளர் வாக்குச் சதவிகிதம் குறைந்திருப்பது கவலையளிப்பதாகவும் சுட்டிக்காட்டினார். தங்களுக்கு அய்யாவைத் தவிர வேறு எந்தக் கட்சியும் தெரியாது என்று உருகிய அருள், தங்களை மருத்துவர் ராமதாஸ் நட்டாற்றில் விற்றுவிட்டாரோ என்ற அச்சமும் வேதனையும் தங்களுக்குள் இருப்பதாகக் கண்ணீர்மல்கக் குற்றம் சாட்டியுள்ளார்.