தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் முதன்மையானவராக இருக்கிறார் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் மற்றும் விடுதலை என குறைவான படங்களையே அவர் இயக்கி இருந்தாலும் அந்த படங்களின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.
முன்னணி நடிகர்களை வைத்து கதையில் சமாதானங்கள் இல்லாமல் அவர் எடுக்கும் படங்கள் கமர்ஷியலாகவும் வெற்றி பெறுகின்றன. இதனால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆசைப்படுகிறார்கள். தற்போது விடுதலை -2 படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.
இந்நிலையில் இப்போது அவர் நான்கு ஆண்டுகளாக உருவாக்கி வரும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி மிகப்பெரிய அளவில் விவாதங்களை உருவாக்கியுள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள பல நடிகர்களின் நடிப்பும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஆனால் படம் வசூல் ரீதியாக தோல்விப்படம் என சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் வெற்றிமாறன் அதிக நாட்கள் ஷூட் செய்து படத்தின் பட்ஜெட்டை இழுத்து விட்டதுதான் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிகராக அறிமுகமான இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குனர்கைளின் முன்திட்டமிடல் இல்லாமைக் குறித்து கண்டித்து பேசியுள்ளார். அதில் “இயக்குனர்கள் திட்டமே இல்லாமல் படப்பிடிப்பை நடத்துகிறார்கள். நடிகர்களைத் தங்கள் கூடவே ‘ட்ராவல்’ பண்ண வேண்டும் என்கிறார்கள். என்ன ட்ராவல்?.. இது ஷூட்டிங் பாஸ். ஒவ்வொரு நாளும் தயாரிப்பாளரின் பணம் காலியாகிக் கொண்டு இருக்கிறது. எனக்கு சிந்தனை வரும்போது எடுப்பேன் என்று சொல்வதால் சரியல்ல.
அதெல்லாம் பழைய கால நிலவுடைமை சிந்தனை. இயக்குனர்கள் படம் கமிட்டானதும் தனக்கு பேர் வர வேண்டும் என நினைக்கிறார்கள். ஒளிப்பதிவாளர்கள் இருக்கும் எல்லா உபகரணங்களையும் பயன்படுத்த வேண்டும் என நினைக்கிறார்கள். இதனால் அதிகமாக பாதிக்கப்பட போவது தயாரிப்பாளர்தான். ஹாலிவுட்டில் ஜுராசிக் பார்க் போன்ற படத்தையே சரியாகத் திட்டமிட்டு 72 நாட்களில் எடுத்து முடிக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.
அவர் இந்த பேட்டியில் சொல்வதெல்லாம் இயக்குனர் வெற்றிமாறனுக்குதான் பொருந்தும் என ரசிகர்கள் கருத்துத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…