தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் கலந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான கோட் திரைப்படம் அதிகபட்சமாக 455 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பை அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் அறிவித்திருந்தார். தமிழகத்தில் 100 கோடி வரை வசூல் செய்திருந்த நிலையில் விஜயுடன் இணைந்து பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். ஆனால் இந்த நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு கலந்து கொள்ளவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக ரஜினியும் விஜயும் மிகப்பெரிய வசூல் வேட்டையை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து பல திரையரங்குகளையும் சினிமா துறையும் வாழவைத்து வருகிறார்கள். கடந்த ஆண்டு வெளியான ரஜினியின் ஜெயிலர் திரைப்படமும் நல்ல வசூலை பெற்றுக் கொடுத்தது. சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படமும் நல்ல வசூலை பெற்று வருகிறது.

இந்த நிலையில் கோட் திரைப்படத்தை பார்த்துவிட்டு தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு போன் செய்து பாராட்டியதாக வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நன்றி, தலைவா. என்னை அழைத்ததுக்காகவும், எங்கள் #GOAT படத்தை அன்புடன் அரவணைத்ததற்காகவும், முழு மனதுடன் பாராட்டியதற்கு மீண்டும் நன்றி எனக் குறிப்பிட்டு இருக்கிறார். விஜய் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் படும் மோசமாக சண்டை போட்டு வரும் சூழலில் விஜய் மற்றும் ரஜினி ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி வருவதை அவரது ரசிகர்கள் உணர்வார்களா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தற்போது வெங்கட் பிரபு பகிர்ந்து உள்ள அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Thank you, Thalaivaaaa!! for the call and for embracing our #GOAT with so much love. Thanks again for appreciating wholeheartedly. Forever grateful, sending you all the love. ♥️♥️♥️♥️ @rajinikanth 🙏🏽🙏🏽
— venkat prabhu (@vp_offl) October 19, 2024
