Connect with us

‘ராமன் இயக்க ராவணன் நடிக்க செம்மயா இருக்கும் சாமி’… இளையராஜா இயக்கத்தில் விரும்பிய ரஜினி!

CINEMA

‘ராமன் இயக்க ராவணன் நடிக்க செம்மயா இருக்கும் சாமி’… இளையராஜா இயக்கத்தில் விரும்பிய ரஜினி!

தமிழ் சினிமாவில் மட்டுமில்லை, இந்திய சினிமாவிலெயே அதிக படங்களுக்கு இசையமைத்தவர் என்ற பெருமைக்குரியவர் இசைஞானி இளையராஜா. கிட்டத்தட்ட 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனைப் படைத்தவர் இளையராஜா. அவரை இசைஞானி, ராகதேவன் என பல பெயர்களில் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இப்போது 82 வயதாகும் நிலையிலும் வெற்றிமாறன் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.

இளையராஜாவுக்கு ஒரு ஆண்டுக்கு முன்னால் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். வில்லனாக தன்னுடைய கேரியரை ஆரம்பித்து, ஹீரோவாகி சூப்பர் ஸ்டாராகி 50 ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருக்கிறார். ரஜினியின் இந்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உதவிய பலரில் இளையராஜாவும் ஒருவர்.

   

1992 ஆம் ஆண்டு அண்ணாமலை திரைப்படம் வரை ரஜினியின் பல முக்கியப் படங்களுக்கு அருமையான பாடல்களைக் கொடுத்துள்ளார் இளையராஜா. இருவருக்கும் ஆன்மீகத்தில் ஆர்வம் உண்டு என்பதால் இருவருக்குள்ளும் ஆழமான நட்பு இருந்தது. இதனால் இளையராஜாவின் அண்ணன் பாஸ்கர் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க சம்மதித்துள்ளார்.

   

அந்த படத்துக்கான இயக்குனர் அப்போது முடிவாகாமல் இருந்த நிலையில் “நான் வேணா அந்த படத்தை இயக்கிவிடுகிறேன். படத்துக்கு ராஜாதி ராஜா என டைட்டில் வைத்துக் கொள்வோம்” என இளையராஜாவே கூறியிருந்தாராம்.  அதைக் கேட்டு ஆச்சர்யமான ரஜினி “அப்படியா சாமி… உண்மையா? ராமன் இயக்க ராவணன் நடிச்சா எப்படி இருக்கும்” எனக் கேட்டாராம்.

 

அதற்கு இளையராஜா “யாருக்கு சாமி தெரியும்? ஷூட்டிங் ஸ்பாட்டுலதான் நான் எவ்ளோ பெரிய ராவணன்னு கூட தெரியவரலாம்” என்றாராம். ஆனால் அந்த படம் வேறு பல காரணங்களால் கங்கை அமரன் இயக்குவதாக இருந்து, பின்னர் சுந்தர் ராஜன் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது.

ஒருவேளை அந்த படத்தை இளையராஜா இயக்கி இருந்தால் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருந்திருக்கலாம்.

More in CINEMA

To Top