“நீங்களாவது ஜெயிச்சிருக்கலாம்”…. சீமானிடம் உருகிய ரஜினிகாந்த்….. கசிந்தது புதிய அரசியல் ரகசியம்…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

By Nanthini on ஐப்பசி 30, 2026

Spread the love

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தமிழக அரசியல் சூழல் மற்றும் வரவிருக்கும் இடைத்தேர்தல் குறித்தும் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில், கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தன்னிடம் வருத்தம் தெரிவித்ததாகச் சுட்டிக்காட்டினார். திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மறைவின் போது ரஜினிகாந்தைச் சந்தித்தாகக் குறிப்பிட்ட அவர், அப்போது தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய ரஜினிகாந்த், “நீங்களாவது வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் சென்றிருக்கலாம், தேர்தல் முடிவுகள் மிகவும் வருத்தமளிப்பதாக இருந்தது” என்று கூறியதாகத் தெரிவித்தார்.

தனது அரசியல் குரல் சட்டமன்றத்திற்குள் எதிரொலிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய சீமான், “நான் நீண்ட காலமாக கூண்டுக்குள் அடைபட்டிருப்பதைப் போல உணர்கிறேன்” என்று உருக்கமாகப் பேசினார். கூண்டுக்குள் இருந்து பேசுவதை விட, ஒரு முறை கூரை மீது ஏறி நின்று சத்தமிட்டால் அந்தப் பேச்சை யாரும் நிராகரிக்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், மக்கள் நலன் சார்ந்த மற்றும் மாநிலத்தின் முக்கியப் பிரச்சினைகளைச் சட்டமன்றத்தில் எழுப்பத் தீவிரமாக விரும்புவதாகத் தெரிவித்தார்.

   

அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்குத் தாம் நேரடியாகப் போட்டியிடப் போவதாகச் சீமான் அறிவித்துள்ளார். மேலும், ஆளுங்கட்சிக்குச் சாதகமாக அமையும் இடைத்தேர்தல் மரபுகளை உடைத்து, காலியாகும் 5 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வழக்கம்போலத் தனித்துப் போட்டியிடும் என்றும் உறுதியளித்தார்.

   

அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்றால், அதைத் தமிழகத்திலேயே முதன்மையான மாதிரித்தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் எனச் சீமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்காக அரசு நிதி வழங்காவிட்டாலும் கூட, பெருந்தொழிலதிபர்களிடம் நன்கொடைகளைப் பெற்றுத் தொகுதி மக்களுக்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் நிறைவேற்றுவேன் என்றும், நீண்டகாலமாக ஆட்சியில் இருப்பவர்களால் முடியாத மாற்றங்களைச் செய்து காட்டுவேன் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.