குஜராத் மாநிலம் சூரத்தின் பாலன்பூர் பாட்டியா சாலையில் இரவில் அரங்கேறிய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பதிவு எண் இல்லாத கருப்பு நிற ஸ்கார்பியோ கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்து சாலையில் சென்ற வாகனங்கள் மீது வரிசையாக மோதி தள்ளியது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து சேதமடைந்தன.
இரு கார்களுக்கு இடையே ஆபத்தான முறையில் பந்தயம் நடந்திருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளன. விபத்தை ஏற்படுத்திய காரின் வேகம் மற்றும் ஓட்டுநரின் பொறுப்பற்ற செயல், அங்கு நின்றிருந்த பொதுமக்களிடையே கடுமையான கோபத்தையும் கொந்தளிப்பையும் உருவாக்கியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த சாலையில் இந்த விபத்து நடந்தபோதிலும், அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், சிலர் லேசான காயங்களுடன் தப்பினர். நம்பர் பிளேட் இல்லாமல் அதிவேகமாகச் சென்று பொதுமக்களின் உயிரோடு விளையாடிய கார் ஓட்டுநரைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
